மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 2 ஜுன் 2020

ஹாங்காங்கிற்கு அடித்த ஜாக்பாட்!

ஹாங்காங்கிற்கு அடித்த ஜாக்பாட்!

ஆசிய கோப்பை தொடரின் போட்டிகள் அனைத்திற்கும் ஐசிசி ஒருநாள் அந்தஸ்து வழங்குவதாக ஐசிசி நேற்று தெரிவித்துள்ளது.

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் இந்த ஆண்டிற்கான ஆசியக் கோப்பை தொடர் வரும் 15ஆம் தேதி அபுதாபியில் தொடங்கவுள்ளது. தகுதிச் சுற்றுத் தொடரில் வெற்றிபெற்ற ஹாங்காங், கடைசி அணியாக இந்தத் தொடரில் இணைந்து கொண்டது. ஹாங்காங் அணிக்கு ஐசிசி அந்தஸ்து கிடையாது என்பதால் அந்த அணி இத்தொடரில் பங்கேற்கும் 2 போட்டிகளும் ஐசிசியின் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படுமா? என்ற சந்தேகம் நிலவி வந்தது. இந்தச் சந்தேகத்திற்கு நேற்று ஐசிசி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இதுகுறித்து ஐசிசியின் தலைமை நிர்வாகி டேவிட் ரிச்சார்ட்சன் கூறுகையில், "ஆசியக் கோப்பை தொடரின் அனைத்துப் போட்டிகளுக்கும் ஐசிசி அந்தஸ்து வழங்குவது ஐசிசி வாரியத்தால் எடுக்கப்பட்ட நல்ல முடிவாகும். சர்வதேச கிரிக்கெட்டின் கட்டமைப்புகளைக் கண்காணித்து, ஒரு பில்லியன் ரசிகர்களைக் கொண்ட இந்த விளையாட்டை மேம்படுத்தவுள்ளோம்.

இந்த ஆண்டுத் தொடக்கத்தில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்றுத் தொடரில் ஒருநாள் அந்தஸ்து இருக்கின்ற, இல்லாத என பரதரப்பட்ட அணிகள் பங்கேற்றன. இது ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் எனக்கோரி அனைத்து போட்டிகளுக்கும் ஒருநாள் அந்தது வழங்கப் பரிந்துரைகள் செய்யப்பட்டன. தற்போது இந்தச் சூழ்நிலையை கருத்தில் கொண்டு இனிவரும் ஆசியக் கோப்பை, உலகக் கோப்பை தொடர்களின் அனைத்துப் போட்டிகளுக்கும் ஒருநாள் அந்தஸ்து அளிக்கப்படுகிறது. அதில் பங்கேற்கும் அணிகளுக்கு ஒருநாள் அந்தஸ்து இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி. தற்போது ஒருநாள் அந்தஸ்துள்ள 16 அணிகளைக் காட்டிலும், அந்தஸ்து இல்லாத அணிகளுக்கு இது ஒரு அங்கீகாரமாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பினையடுத்து தற்போது ஆசியக் கோப்பை தொடரில் ஹாங்காங் விளையாடும் போட்டிகள் அனைத்தும் ஐசிசியின் அந்தஸ்துப் பட்டியலில் இடம்பிடிக்க உள்ளது.

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon