மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 2 ஜுன் 2020

உதகை: மீண்டும் நீராவி என்ஜின்!

உதகை: மீண்டும் நீராவி என்ஜின்!

நூறாண்டுகள் பழமை வாய்ந்த நீராவி என்ஜினைச் சரிசெய்து, உதகமண்டலத்திலுள்ள மலை ரயிலை இயக்க ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு, சுவிட்சர்லாந்திலிருந்து நீராவி என்ஜின் ஒன்றை வாங்கிய ஆங்கிலேயர்கள் உதகையில் மலை ரயிலை இயக்கப் பயன்படுத்தினர். மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை செல்லும் இந்த மலை ரயில் அனுபவத்துக்காகவே, பலரும் அங்கு சுற்றுலா செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தனர். நிலக்கரியில் இயங்கும் நீராவி என்ஜின் என்பதால், இதற்குத் தேசிய அளவில் முக்கியத்துவம் கிடைத்து வந்தது.

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நிலக்கரி தட்டுப்பாடு நிலவியதால், உதகை மலை ரயில் என்ஜினை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால், இந்த நீராவி என்ஜின் மேட்டுப்பாளையத்தில் மக்கள் காட்சிக்காக வைக்கப்பட்டது. தற்போது நிலக்கரி தட்டுப்பாடு முடிவுக்கு வந்துள்ளதால், இந்த ரயில் என்ஜினை இயக்க முடிவு செய்துள்ளது மத்திய ரயில்வே துறை. இதனால் சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஈர்க்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக, மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறப்பு ரயிலில் குன்னூர் கொண்டு வரப்பட்டது நீராவி என்ஜின். தற்போது இந்த ரயிலானது டீசல் என்ஜின் மூலம் இயக்கப்பட்டு வருகிறது.

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon