மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 2 ஜுன் 2020

சிறப்புக் கட்டுரை: உண்மையான கூட்டாட்சியை உருவாக்குவது எப்படி?

சிறப்புக் கட்டுரை: உண்மையான கூட்டாட்சியை உருவாக்குவது எப்படி?

வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்

கூட்டாட்சி, ஆளுநர் குறித்து நேற்று வெளியான கட்டுரையின் தொடர்ச்சி

ஜனதா கட்சியின் தலைவர் எஸ்.ஆர். பொம்மை ஆகஸ்ட் 1988இல் கர்நாடக மாநிலத்தின் முதல்வரானார். செப்டம்பர் 1988இல் ஜனதா கட்சியும் லோக் தளம் கட்சியும் இணைந்து ஜனதா தளம் என்ற புதிய கட்சியை உருவாக்கின. ஏற்கனவே சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு பெற்றிருந்த பொம்மைக்கு மேலும் 13 உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர். சில நாட்கள் கழித்து கே.ஆர். மொலகேரி என்னும் ஜனதா தள உறுப்பினர் மாநில ஆளுநரைச் சந்தித்து, தன்னை 19 உறுப்பினர்கள் ஆதரிப்பதாகவும், தன்னை ஆட்சியமைக்க அழைக்க வேண்டுமெனக் கூறினார். அதனை ஏற்ற ஆளுநர், பொம்மை சட்டசபையில் பெரும்பான்மையை இழந்துவிட்டதால், அவரது ஆட்சியைக் கலைத்துவிடலாம் என்று பரிந்துரைத்தார். ஆனால், மொலகேரி குறிப்பிட்ட உறுப்பினர்கள் தாங்கள் கட்சி மாறவில்லை என மறுத்தனர்; பொம்மை சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பை வழங்காமல், 1989 ஏப்ரல் 19ஆம் நாள், பிரதமர் ராஜீவ் காந்தியின் பரிந்துரையின் பேரில், குடியரசுத் தலைவர் வெங்கட்ராமன், பொம்மையின் அரசைக் கலைத்தார். கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைக்கு வந்தது. இதனை எதிர்த்து எஸ்.ஆர். பொம்மை தொடர்ந்த வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டபின், பொம்மை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

1994ஆம் வருடம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இவ்வழக்கை நீதிபதி குல்தீப் சிங் தலைமையில் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்புச் சட்ட பெஞ்சு விசாரித்தது. பொம்மையின் அரசைக் கலைத்தது செல்லாது என்று அறிவித்த நீதிபதிகளின் தீர்ப்பில் (S. R. Bommai V. Union of India, AIR 1994 Page 1918) பின்வரும் முக்கிய சட்ட விளக்கங்கள் இடம் பெற்றிருந்தன:

1. குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்துவது, நீதிமன்றப் பரிசீலனைக்கு உட்பட்டதாகும். தீய உள்நோக்குடன் (malafide) ஆட்சி கலைக்கப்பட்டிருக்குமெனில், கலைக்கப்பட்ட ஆட்சியை மீண்டும் பதவியில் அமர்த்த நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உண்டு.

2. பிரிவு 356இல் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரம் வரம்புக்கு உட்பட்டதே. நிபந்தனைகளுக்கும் மேற்பார்வைக்கும் உட்பட்டதே.

3. மத்திய அமைச்சரவை, குடியரசுத் தலைவருக்குச் செய்யும் பரிந்துரை நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் வராவிட்டாலும், அப்பரிந்துரை எந்தச் சான்றுகளின் அடிப்படையில் செய்யப்பட்டதோ அவற்றை நீதிமன்றங்கள் பரிசீலித்து ஆய்வு செய்யலாம்.

4. மாநில அரசுகளைக் கலைக்கும்போது காரண காரியங்கள் நேர்மையாகவும் உண்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க வேண்டும். கலைக்கப்பட்ட பின் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலை அவசியம் பெற வேண்டும்.

5. அரசியலமைப்புச் சட்டத்தைத் தவறாக பயன்படுத்தி ஆட்சி கலைப்பு செய்யப்பட்டிருக்கிறது என்று நீதிமன்றங்கள் கருதினால், கலைக்கப்பட்ட அரசை மீண்டும் பதவியிலமர்த்தும் உரிமை நீதிமன்றங்களுக்கு உண்டு.

6. இந்தியக் குடியரசின் மதச்சார்பின்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் செயல்படும் மாநில அரசுகளைக் கலைக்கும் உரிமை மத்திய அரசுக்கு உண்டு.

கூட்டாட்சியை வலுப்படுத்திய தீர்ப்பு

இத்தீர்ப்பின் பயனாக, பிரிவு 356இனைப் பயன்படுத்தி மாநில அரசுகள் கலைக்கப்படும் சம்பவங்கள் வெகுவாகக் குறைந்துவிட்டன. இத்தீர்ப்பு, மத்திய - மாநில அரசுகள் உறவில், மாநில அரசுகளின் நிலையைப் பலப்படுத்தியதன் மூலம் இந்தியக் குடியரசில் கூட்டாட்சியை (Federalism) பலப்படுத்தியுள்ளது.

பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள், அரசியல் சூழல்கள் உள்ள இந்தியாவில் பன்மையில் ஒருமை என்ற தத்துவத்தில் கடந்த 69 ஆண்டுகளாகப் பல சிக்கல்களைச் சந்தித்து அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட இந்தியாவில் சேதாரம் இல்லாமல் மக்களாட்சி நடைபெறுவது பன்னாட்டு அளவில் ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமைக்குரியதாகும்.

‪‪1977இல் ராஜஸ்தான் அரசு கலைக்கப்பட்டபோது, உச்ச நீதிமன்றத்தை அணுகியபோது, நீதிபதி பகவதி பிரிட்டிஷ் ஆட்சியைப் போல் அல்லவா இந்த 356 இருக்கிறது என்று வினா எழுப்பினார். இது இந்திய அரசியலில் அப்புறப்படுத்த வேண்டியது என்று கூறினார் (The State of Rajasthan vs. Union of India1977)‬‬‬‬.‬‬

உச்ச நீதிமன்றத்தில் பொம்மை வழக்குக்குப் பிறகு, Kihoto hollohan vs Zachillhu and other & ‎Rameshwar Prasad and others vs Union of India 2005 என்ற இரண்டு வழக்குகள் பிரிவு 356ஐ எதிர்த்து விசாரணைக்கு வந்தன. அப்போது இந்தியா ஒற்றையாட்சி என்பதை விட கூட்டாட்சி என்று சொல்லாவிட்டாலும் ஒற்றையாட்சி - கூட்டாட்சியின் கலவை என்று கருதிக்கொண்டு 356ஐ மூத்த அண்ணன் மாதிரி விருப்பத்திற்கு ஏற்றவாறு பிரயோகிப்பது குடியாட்சி இல்லை என்ற கருத்தை உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

இந்திய அரசியல் சட்டத்தில் செல்லாப் பிரிவு என்று சொல்லப்பட்ட பிரிவு356ஐக் கொண்டு பழிவாங்கல் நடந்ததை எல்லாம் வரலாறு சொல்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைத் தஞ்சாவூர் பொம்மையைப் போல ஆட்டி வைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை. இருப்பினும் மத்திய அரசு ஆணவத்தோடு கடந்த 69 ஆண்டுகளாகப் பிரிவு 356ஐக் கொடுமையாகப் பயன்படுத்திக்கொண்டுதான்வருகிறது. இந்த நிலையில் கூட்டாட்சி என்ற நிலைப்பாடு காட்சிப் பிழையாகிவிடக் கூடாது.

மத்தியில் ஆட்சிப் பொறுப்பில் இல்லாத கட்சி ஒரு மாநிலத்தினை ஆட்சி செய்தால் அங்கு ஆளுநருடைய அணுகுமுறையும், நிலைப்பாடும் எப்படி இருக்கும் என்று கேள்வி பிஸ்வநாத் தாஸ் அரசியல் நிர்ணயச் சபையில் 1949 மே, 31 அன்று எழுப்பினார்.

பூர்த்தியாகாத மாநில அபிலாஷைகள்

மத்திய, மாநில உறவுகளில் இருக்கும் சிக்கல்களை அறிய 1966ஆம் ஆண்டு மத்திய அரசு அமைத்த நிர்வாக சீர்திருத்தக் கமிஷன், 1969ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் தமிழக அரசு அமைத்த இராஜமன்னார் குழு, மத்திய அரசு 1983ஆம் ஆண்டு அமைத்த சர்க்காரியா குழு, 2000ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டச் செயல்பாடுகளை பரிசீலிப்பதற்கான தேசிய கமிஷன், காஷ்மீர் மாநிலத்தில் ஃபாரூக் அப்துல்லா அமைத்த காஷ்மீர் சுயாட்சி குறித்தான ஆய்வுக் குழு, மத்திய அரசு 2007இல் அமைத்த நீதிபதி பூஞ்ச் கமிஷன் போன்ற குழுக்கள், கர்நாடக முதல்வராக ராமகிருஷ்ண ஹெக்டே இருந்தபோது, காங்கிரஸ் அல்லாத முதல்வர்கள் மாநாடு, என்.டி.ராமராவ் ஐதராபாத்தில் கூட்டிய காங்கிரஸ் அல்லாத மாநாடு, மேற்கு வங்க முதல்வராக இருந்த ஜோதிபாசு அவர்கள் கூட்டிய காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் மாநாடு, ஸ்ரீநகர் மாநில சுயாட்சி மாநாடு என மாநாட்டுத் தீர்மானங்களும், பிரகடனங்களும், அறிக்கைகளும் வெளியிடப்பட்டுள்ளன. இவை அனைத்துமே மாநில அரசுகளின் தேவைகளையும் அபிலாஷைகளையும் எடுத்துச் சொல்கின்றன. ஆனால், இவற்றின் மீது மேல் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. மாநில அரசுகளின் அபிலாஷைகள் பூர்த்தியாகாமலேயே உள்ளன.

பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள் கொண்ட பரந்த இந்தியாவில் நாட்டின் ஒற்றுமை, அரசியல் ரீதியான நிலைத்தன்மை தொடர்ந்து உறுதிபட இருக்க மாநிலங்களுக்கு உரிய அதிகாரங்களை வழங்கி, அவற்றின் இறையாண்மையைப் பாதுகாக்கக்கூடிய வகையில் மத்திய அரசு தன் கடமைகளை ஆற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம். அப்படியான நடவடிக்கைகள் இல்லையென்றால், இது குறித்து சர்க்காரியா கமிசன் அறிக்கையில் குறிப்பிட்டவாறு மத்திய அரசுக்கு ரத்த அழுத்தம் ஏற்படுத்தும் என்பதோடு, மற்றொரு பக்கத்தில் சோகை நோயை உருவாக்கி இறுதியில் செயலற்ற நிலைக்கு மத்திய அரசு சென்றுவிடும் என்ற எச்சரிக்கையையும் செய்துள்ளது.

கவர்னர்கள் காவல்காரன் என்று சொன்னாலும், அந்தக் காவல்காரர்களை யார் காவல் காப்பது என்பதுதான் இன்றைக்கு நிலைமை.

ஜனநாயகம் என்ற போர்வையில் மத்திய அரசு, மாநிலங்களுடைய அதிகாரங்களில் தலையிட்டு தேவையில்லாத பிரச்சினைகளை உருவாக்கும்போது, நிலைமை சீர்கெட்டுவிடும் என்பதை மத்திய அரசு உணர வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். மாநிலங்களைத் தன்னுடைய சாகாக்கள் என்று தோழமையோடு அழைத்துச் சென்றால்தான் இந்தியா பன்மையில் ஒருமையைக் காண முடியும். எனவே இன்றைய நிலையில் மத்திய மாநில உறவுகளில் பெரும் மாற்றங்கள், வர வேண்டியது அவசரமும் அவசியமுமானது.

(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன் திமுக செய்தித் தொடர்பாளர், கதைசொல்லி இதழின் இணையாசிரியர், பொதிகை - பொருநை கரிசல் பதிப்பகத்தின் நிறுவனர். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

*

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு / ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

பீம் (BHIM) Android / IOS

டெஸ் (TEZ) Android / IOS

போன்பே (PhonePe) Android / IOS

பேடிஎம் (Paytm) Android / IOS

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

en.minnambalam.com/subscribe.html

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon