மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 28 மே 2020

ஜார்க்கண்ட் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

ஜார்க்கண்ட் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

ஜார்க்கண்டில் முன்னாள் அமைச்சர் மீதான வழக்கில் வாட்ஸ் அப் கால் மூலம் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ததற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் அமைச்சர் யோகேந்திரா ஷாவூ மற்றும் அவரது மனைவி நிர்மலா தேவி கைது செய்யப்பட்டனர். இது சம்பந்தமான வழக்கு ஜார்க்கண்ட் நீதிமன்றத்தில் நடைபெற்றது. ஆனால், அந்த வழக்கில், அவர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம். அவர்கள் போபாலில் தான் தங்கியிருக்க வேண்டும். நீதிமன்றத்தில் ஆஜராக மட்டும் தான் ஜார்க்கண்ட் வர வேண்டும். மற்ற நேரத்தில் வரக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், மீண்டும் நேற்று (செப்டம்பர் 9) நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே மற்றும் எல்.என்.ராவ் அடங்கிய அமர்வு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏப்ரல் 19ஆம் தேதி, எங்களின் எதிர்ப்பையும் மீறி விசாரணை நீதிமன்ற நீதிபதி, தங்கள் மீதான வழக்கில் வாட்ஸ் அப் கால் மூலம் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ததாக உச்ச நீதிமன்றத்தில் இருவரும் தெரிவித்தனர்.

இதையடுத்து, ஜார்க்கண்டில் என்ன நடக்கிறது, இதுபோன்ற விஷயத்தை அனுமதிக்க முடியாது. இது போன்ற செயல்களை நீதிபதி ஒருவர் செய்வதை நாங்கள் ஏற்க மாட்டோம். இது நடந்திருக்கக் கூடாது. என்ன மாதிரியான விசாரணை இது. இது என்ன ஜோக்கா எனக் கேள்வி எழுப்பினர்.

ஷாவூக்கு எதிராக 21 வழக்குகளும், அவரது மனைவிக்கு எதிராக ஒன்பது வழக்குகளும் நிலுவையில் இருக்கிறது. தேசிய தெர்மல் பவர் கார்ப்பரேஷனால் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராகப் போராட்டம் நடத்தியது தொடர்பாக அதிக வழக்குகள் இருக்கின்றன என்று தம்பதி சார்பாக ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon