மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 2 ஜுன் 2020

டி.ஆரின் மது ஒழிப்புப் பாடல்!

டி.ஆரின் மது ஒழிப்புப் பாடல்!

டி.ராஜேந்தர் பாடிய ‘ஏந்திரு அஞ்சலி ஏந்திரு’ எனும் விழிப்புணர்வு பாடல் இணையத்தில் கவனம் பெற்றுவருகிறது.

சினிமாவில் ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா’வாக வலம்வருபவர் டி.ராஜேந்தர். தனது அதிரடியான பேச்சுகளால் அவ்வப்போது அரசியல் வட்டாரத்திலும் புகையைக் கிளப்பிவிடும் இவர், தனது மகன் சினிமாவில் ஜொலிக்கத் தொடங்கிய பின்னரும்கூட தனக்கெனத் தனிப்பாதை ஒன்றை அமைத்துக்கொண்டு சினிமாவில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஒரு புதிய முயற்சியாக மது விழிப்புணர்வு பாடல் ஒன்றைப் பாடியுள்ளார் டி.ஆர். ‘ஏந்திரு அஞ்சலி ஏந்திரு’ எனத் தொடங்கும் இந்தப் பாடல் டாஸ்மாக் பிரச்சினை குறித்து அழுத்தமான சில கேள்விகளை ஆட்சியாளர்களிடமும் பார்வையாளர்களிடமும் முன்வைக்கிறது.

இந்தப் பாடலை கபிலன் வைரமுத்து எழுத, பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார். இந்தப் பாடல் தற்போது இணையத்தில் கவனம் பெற்றுவருகிறது. இதில் இடம்பெற்றுள்ள பாடலின் டைட்டில் வரிகள் மணிரத்னம் இயக்கிய அஞ்சலி படத்தில் இடம்பெறும் புகழ்பெற்ற வசனம் எனும் விஷயம் பலரும் அறிந்ததே.

புதன், 12 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon