மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 2 ஜுன் 2020

பெட்ரோல் வரியைக் குறைத்த ராஜஸ்தான் அரசு!

பெட்ரோல் வரியைக் குறைத்த ராஜஸ்தான் அரசு!

பெட்ரோல், டீசல் விலை மீதான வாட் வரியை ராஜஸ்தான் அரசு குறைத்துள்ளது.

பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலையைத் தினமும் மாற்றியமைக்கும் முறையைக் கடந்த ஆண்டு ஜூன் 16ஆம் தேதி மத்திய அரசு கொண்டுவந்தது. அன்றிலிருந்து தற்போது வரை ரூ.15 வரை அவற்றின் விலை அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து அவற்றின் விலை உயர்ந்து வருவது பல்வேறு தரப்பினரையும் பெரிதும் பாதித்துள்ளது.

விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பல்வேறு அரசியல்கட்சிகளும் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன. எனினும் அவற்றின் மீதான உற்பத்தி வரியைக் குறைக்க வாய்ப்பில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. எனவே, எரிபொருள் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி காங்கிரஸ் சார்பில் இன்று இந்திய அளவில் பந்த் நடைபெறவுள்ளது. பல்வேறு கட்சிகளும் இந்த பந்த்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், பெட்ரோல் மீதான வாட் வரியைக் குறைப்பதாக ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜெ அறிவித்துள்ளார். ஹனுமங்கார் பகுதியில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், பெட்ரோல் மீதான வாட் வரி 30 சதவிகிதத்தில் இருந்து 26 சதவிகிதமாகவும் டீசல் மீதான வாட் வரி 22 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாகவும் குறைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம், அவற்றின் விலை ரூ.2.50 வரை குறையும்.

ஞாயிறு, 9 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon