மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 2 ஜுன் 2020

கிட்ஸ் கார்னர்!

கிட்ஸ் கார்னர்!

இயந்திரவியலைக் கற்றுத்தரும் விளையாட்டுகள்!

ஓட்டப் பந்தயம், தடை தாண்டுதல்னு நிறைய ஓடியிருப்போம். ஆனா, அதுவெல்லாம் போட்டிக்காக. ஓட்டப் பந்தயத்துக்குக் கொஞ்சம் சுவாரஸ்யமூட்டி, ஜாலியா விளையாடுறதுக்கு சில சிறந்த வழிகள் இருக்கு. அதைத்தான் இன்னிக்குப் பார்க்கப்போறோம் குட்டீஸ்.

நுங்கு வண்டி ரேஸ்

இது கிராமங்களின் அக்மார்க் விளையாட்டு. ஒரு பெரிய குச்சி, இரண்டு நுங்கு ஓடுகள், ஒரு கயிறு இருந்தா நுங்கு வண்டி ரெடி. ஒரு வண்டிக்குத் தேவையான மிகச் சரியான திட்டத்துடன் திடமாகச் செய்தால் மட்டும்தான் ரேஸ்ல ஜெயிக்க முடியும். இல்லைன்னா, பாதி வழியிலேயே வண்டி அவுட் ஆயிடும், நாமளும் அவுட் ஆயிடுவோம்.

சிறந்த நுங்குகளைத் தேர்ந்தெடுப்பதிலிருந்து, குச்சியின் அளவு, கயிற்றின் தடிமன்னு பெரிய பெரிய அறிவியல் நுட்பங்களையெல்லாம் போற போக்குல சொல்லிக் கொடுக்கிற விளையாட்டு இது.

டயர் வண்டி ரேஸ்

இங்கே நுங்கு வண்டிக்குப் பதிலா டயர் இருக்கும். அதை ஓட்டுவதற்கு ஒரு குச்சி இருக்கும். அவ்வளவுதான் வித்தியாசம். ஆனா, இதோட அறிவியல் அதிகம்.

ஒரு பொருளின்மீது தொடர்ந்து வெளித்தூண்டுதல் கொடுக்கப்பட்டால், தூண்டுதலின் விசை நிறுத்தப்படும் வரை அந்தப் பொருள் சீரான இயக்கத்தில் இருக்கும்.

இயக்கவியலின் அடிப்படைக் கோட்பாடு இது. இந்தக் கோட்பாட்டை இயல்பா புரியவைப்பதுதான் இந்த விளையாட்டு. சரியான டயர் தேர்வு, தடிமனான குச்சி, குண்டு குழியான சாலையில் ரேஸ் நடந்தா டயரோட சமநிலையைச் சீரா வைத்திருக்க வேகத்தை எங்கே குறைக்கணும் எங்கே அதிகப்படுத்தணும் என்று சரியாகக் கணித்து செயல்பட வேண்டிய தேவைன்னு பல விஷயங்களை சாதாரணமா சொல்லிக்கொடுக்கும் விளையாட்டுகள் இவை.

விளையாட்டுகள் மூலமா விளையாட்டா நாம கத்துக்குற விஷயங்கள்தான், கடைசி வரைக்கும் நமக்குக் கைகொடுக்கும்.

விளையாடிட்டே ஜெயிப்போம் வாங்க..!

- நரேஷ்

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon