மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 28 மே 2020

சுறுசுறுப்பு மனிதர்கள்: இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?

சுறுசுறுப்பு மனிதர்கள்: இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?

உலக சுகாதார நிறுவனம் 168 நாடுகளில் சுறுசுறுப்பான மனிதர்கள் பற்றி நடத்திய ஆய்வில் உகாண்டா முதலிடமும் இந்தியா 117ஆவது இடமும் பிடித்துள்ளது.

அந்த ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுறுசுறுப்பான மனிதர்கள் பற்றிய ஆய்வு, 168 நாடுகளில் நடத்தப்பட்டது. இதில் உகாண்டா முதலிடம் பெற்றுள்ளது.

உகாண்டாவாசிகள் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கின்றனர். இங்குள்ள, 95 சதவிகிதம் பேர் உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்துகின்றனர். 5.5 சதவிகிதத்தினர் உடலுழைப்பில் ஈடுபடுவதில்லை.

இந்தப் பட்டியலில், இந்தியா 117ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் பெரும்பாலானோர் உடற்பயிற்சி செய்வதில்லை. இதனால், உடல்ரீதியாக மட்டுமின்றி, மனரீதியாகவும் மிக மந்த நிலையில் இருப்போர் அதிகம். கடைசி இடம் பெற்றுள்ள குவைத் நாட்டில் 68 சதவிகிதம் பேர் உடற்பயிற்சியைப் பற்றி நினைத்துக்கூட பார்ப்பதில்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உலகளவில் 32 சதவிகிதப் பெண்களும் 23 சதவிகித ஆண்களும் செய்ய வேண்டிய உடற்பயிற்சியில் ஈடுபடாமல் அந்த நாடு இந்தப் பட்டியலில் 46ஆவது இடத்தில் உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல 36 சதவிகித பிரிட்டன்வாசிகள் அத்தியாவசிய 150 நிமிட உடற்பயிற்சியில் ஈடுபடாமல் அதில் 40 சதவிகிதப் பெண்களும் 32 சதவிகித ஆண்களும் மந்த நிலையோடு இருக்கின்றனர் என்று அந்த ஆய்வு அறிக்கை கூறுகிறது. சைக்கிள் ஓட்டுவது, ஓடுவது, சுறுசுறுப்பாக நடப்பது என 150 நிமிடங்கள் உடற்பயிற்சிக்காகச் செலவு செய்ய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்துகிறது.

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon