மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 2 ஜுன் 2020

சந்தை டிப்ஸ்: மேக்கப் செய்யும் மாயம்!

சந்தை டிப்ஸ்: மேக்கப் செய்யும் மாயம்!

வித்யா குமார்

செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும்

அழகே உன்னை ஆராதிக்கிறேன்..!நேற்று வெளியான கட்டுரையின் தொடர்ச்சி

மணமகள் மேக்கப்பில் புது வரவான ஏர்பிரஷ் மேக்கப் பற்றி நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் சில் பிரீஸ் ப்யூட்டி பார்லரின் (Chill Breeze Beauty Parlour) கிரியேட்டிவ் ஹெட் அனு.

மணமகளின் முக அமைப்பு, ஸ்கின், டிரஸ் எல்லாத்துக்கும் பொருந்துற மாதிரியான மேக்கப் செய்யுறது ரொம்ப முக்கியம். அதேபோல இப்ப ட்ரெண்டுல என்னென்ன மேக்கப் இருக்குன்னு கவனிக்கிறது அதைவிட மிக அவசியம். அப்படிப் பார்த்தால், இப்ப ‘நியூட் மேக்கப்’ தான் ட்ரெண்ட். அதாவது மேக்கப் போட்ட மாதிரியே தெரியாமல், ‘நேச்சுரல் பியூட்டி லுக்’ என்கிற இயற்கை அழகுத் தோற்றம்தான் இப்போதைய ட்ரெண்ட். இப்படி ஒரு மேஜிக்கைச் செய்யறதுதான் ஏர்பிரஷ் மேக்கப்.

பொதுவாகவே மேக்கப் செய்யறதுக்கு அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை பிரஷ், ஸ்பாஞ்ச் இதைத்தான் பயன்படுத்துவோம். ஆனால், இந்த மேக்கப்பில் ஏர்பிரஷ் மெஷின் மூலமாக, ஸ்ப்ரே முறையில் மேக்கப்பை அப்ளை செய்வோம். கார்களுக்கு ஸ்ப்ரே பெயின்டிங் பண்றதைப் பார்த்திருப்பீர்களே அதுமாதிரிதான்.

இந்த மெஷின்ல ட்ரிக்கர் கன், மெடிக்கல் கிரேடு குழாய் , கம்ப்ரஸர்னு மொத்தம் மூணு பகுதிகள் இருக்கும். கம்ப்ரஸர் மூலமா சீரான காற்றழுத்தம் உண்டாக்கி, குழாய் மூலமா முகத்தில் மேக்கப்பை ஸ்ப்ரே செய்யலாம். இந்த முறையில மேக்கப் மெல்லிய லேயரா ஸ்கின்ல அப்ளை ஆகறதால, மேக்கப் போட்டதே தெரியாம, ஒரிஜினல் ஸ்கின் போலவே தோணும். இந்த மேக்கப் முகத்தைத் தவிர, ஐ ஷேடோ, பிளஷ்ஷர், லிப்ஸ்டிக்னு அடுத்தடுத்த ஸ்டெப்ஸ் எல்லாம் வழக்கமான செய்முறைதான்.

முதல்ல ஏர்பிரஷ் ஃபவுண்டேஷன் எடுத்துக்கறகுத்துக்கு முன்னாடி ஸ்கின்னை க்ளென்ஸர் மூலமா நல்லா சுத்தம் செய்யணும். அடுத்ததா ஏர்பிரஷ் மேக்கப் செய்யறதுக்கான ஸ்பெஷல் ஃபவுண்டேஷனை எடுத்துக்கணும்.

ஏர்பிரஷ் கன்னின் மேல்பகுதியில் தேவையான அளவு ஃபவுண்டேஷனைச் சேர்த்துக்கணும். அப்புறம் கன்னுடன் இணைக்கப்பட்டிருக்கும் குழாயை கம்ப்ரஸர் மெஷின்ல பொருத்தி, கன்னில் உள்ள பட்டன்ல லைட், மீடியம், ஹெவின்னு நமக்குத் தேவையான அழுத்தத்தை செலக்ட் செய்யணும். அடுத்ததா, முகத்திலிருந்து 3 அல்லது 4 இன்ச் தொலைவில், ஏர்பிரஷ் கன்னைக் கையில் பிடித்தபடி ட்ரிக்கரைச் சீராக அழுத்தி முகத்தில், கழுத்தில், காதில் என ஃபவுண்டேஷனை பரவலா ஸ்ப்ரே செய்யணும். இடைவெளி இல்லாமல் சீராக ஸ்ப்ரே செஞ்சு முடித்துப் பார்த்தால், ஃபவுண்டேஷன் ஸ்கின்ல திட்டுத்திட்டா இல்லாம நேச்சுரலா செட் ஆகியிருக்கும்.

பிரஷ், ஸ்பாஞ்சு மூலமா மேக்கப் போடும்போது மேக்கப் போட்டிருக்கிறது அப்படியே தெரியும். அதுவும் சிலருக்கு மேக்கப் போட்டதுக்கு அப்புறம் நேர்ல பார்த்தா அழகாவும், போட்டோவுல பார்த்தா ஒரே வெள்ளையடிச்ச மாதிரியும் தெரிவாங்க. ஏர்பிரஷ் மேக்கப்பில் இந்தப் பிரச்சினை இருக்காது. இதுல இன்னொரு முக்கியமான விஷயம், முகத்துக்கு ஸ்பாஞ்ச் மூலமா மேக்கப் செய்யறதுக்கு அதிக அளவு ஃபவுண்டேஷன் செலவாகும். ஏர்பிரஷ் மேக்கப்புக்கு சிறிதளவு ஃபவுண்டேஷன் லோஷனே போதுமானது.

ட்ரையல் தேவை தோழிகளே

கல்யாணத்துக்கு மேக்கப்னு புக் பண்ணாலே, கல்யாணத்துக்கு முன்னாடியே ஒரு ட்ரையல் மேக்கப் கட்டாயம் செஞ்சு பார்ப்பாங்க. எல்லா சலூன்லயும் இது நடைமுறையில் இருக்கு. இதுவரைக்கும் மேக்கப் போடுற முறையில, மேக்கப்பை ஸ்பாஞ்ச் மூலமா முகத்துல தேய்ச்சு தேய்ச்சு அப்ளை செய்யும்போது, சென்ஸிடிவ் ஸ்கின் இருக்கறவங்களுக்கு ஸ்கின் சிவந்து தடிச்சு போகிறதுக்கு வாய்ப்பிருக்கு. ஆனா, ஏர்பிரஷ் மேக்கப்பில் பிரைமர் அப்ளை செய்யறதுக்கும், கரும்புள்ளிகளையும் தழும்புகளையும் மறைக்க கன்சீலர் அப்ளை செய்யறதுக்கும் மட்டுமே பிரஷ் இல்லைன்னா ஸ்பாஞ்ச்சுல அப்ளை செய்ய வேண்டியிருக்கும். மத்தபடி ஏர்பிரஷ் முறையில் ஸ்கின்னைத் தொடாம ஸ்ப்ரே முறையில் மேக்கப் போடுவதால் கல்யாணப் பொண்ணுக்கு எந்த டென்ஷனும் இல்லாமல் ரிலாக்ஸா மேக்கப் போட்டுக்க முடியும்.

மேக்கப்பே ஒரு கலைதான். சிரிக்கும்போது கன்னங்களை அழகாகக் காட்ட, மூக்கை எடுப்பா காட்டறதுக்குன்னு சில ஹைலைட் விஷயங்கள் மேக்கப்பில் இருக்கு. குறிப்பா மணப்பெண் மேக்கப்பில் இந்த ஹைலைட்டிங் ரொம்ப ரொம்ப அவசியம். முன்னாடியெல்லாம் கன்னத்துக்கு பிளஷ்ஷரை அப்ளை செஞ்சு பளபளப்பா காட்டுவோம்.

கண் சிமிட்டும் அழகு

முக அமைப்புக்கு ஏத்தமாதிரி புருவத்தை ஷேப் செய்வது அவசியம். மேக்கப் போடும்போது புருவத்தை அடர்த்தியாகக் காட்டறதுக்கு ஐப்ரோ பென்சிலால் வரைவோம். அப்புறம் கண்களை அகலமா காட்றதுக்கு இமை முடிகள்ல மஸ்காரா அப்ளை செய்யணும். சில பேருக்கு இமை முடிகள் அடர்த்தி குறைவா இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு காஸ்மெடிக் கடையில கிடைக்கும் ரெடிமேட் ஐலேஷ் வாங்கி ஒட்டிக்கலாம். அதுக்கும் மஸ்காரா அப்ளை செய்யணும்.

அடுத்ததா, மேல் மற்றும் கீழ் இமையின் ஓரங்களில் ஐலைனர் வரைஞ்சுக்கணும். கறுப்பு தவிர ஊதா, பச்சை, கிரே கலர்லயும் ஐலைனர் கிடைக்குது. மணமகள் பயன்படுத்தும் உடைக்குத் தகுந்தாற்போல், கலரை செலக்ட் செய்துகொள்ளலாம். மேல் இமைப்பகுதியில் கன்சீலிங் செய்து ஸ்கின் டோனுக்கு ஏத்த மாதிரி சரி செஞ்சதுக்கு அப்புறம்தான் ஐஷேடோ போடணும். பிங்க் மற்றும் கோல்டு கலர், ஊதா மற்றும் கிரே கலர் இப்படி ரெண்டு கலர் ஐஷேடோவைச் சேர்த்துப் போடுவதுதான் இப்போதைய ட்ரெண்ட்.

முகூர்த்தத்துக்கான மேக்கப்னா ஐஷேடோவை டிரஸ்ஸுக்கு பொருத்தமான கலர்லயும், ரிசப்ஷன், பார்ட்டி மாதிரியான இடங்களுக்கு டிரஸ்ஸுக்கு கான்ட்ராஸ்ட் கலர்லயும் ஐஷேடோ பயன்படுத்தினால் நல்லாயிருக்கும். அதேமாதிரி, இப்போதைக்கு ப்ளூ, கிரீன் மாதிரியான நிறங்கள் மற்றும் ஸ்மோக்கி ஐ மேக்கப்தான் பொண்ணுங்களோட சாய்ஸாக இருக்கு.

லிப்ஸ்டிக் செய்யும் மாயம்

கல்யாணப் பொண்ணோட புன்னகையைப் பளிச்சுனு காட்டும் வேலையை லிப்ஸ்டிக் செய்திடும். முதலில் லிப் லைனர் பென்சில் எடுத்து உதட்டை அழகா ஷேப் செய்யணும். மெல்லிய உதடுகளைத் தடிமனாகவும், தடிமனான உதடுகளை மெல்லியதாகவும் காட்டறதுன்னு உங்களோட முக அமைப்புக்கு ஏத்த மாதிரி வரைஞ்சுக்கலாம்.

அப்புறம், லிப் பிரஷ் மூலமா லிப்ஸ்டிக்கைக் கொஞ்சமா எடுத்து, பென்சிலால் வரைந்த கோட்டுக்குள் அப்ளை செய்யணும். அதுக்கு அடுத்த லேயரா லிப் க்ளாஸ் அப்ளை செய்து உதடுகளைப் பளபளப்பா காட்டலாம். லிப் கிளாஸ் பயன்படுத்தி உதட்டுக்கு மினுமினுப்பு கூட்டலாம் என்று விரிவாக விளக்குகிறார் அனு.

அதெல்லாம் சரி, மேக்கப் போட்டாச்சு, திருமணமும் நல்லபடியா முடிஞ்சுடுச்சு. போட்ட மேக்கப்பை எப்படி கலைக்குறதுன்னு கேட்கலாம். பார்லரில் போடும் மேக்கப் குறைந்தது 10 மணி நேரம் வரை இருக்கும். அந்த மேக்கப்பைச் சாதாரணமாக தேங்காய் எண்ணெய் தேய்த்து அரை மணி நேரம் கழித்து எடுத்துவிடலாம் என்கிறார் அனு.

மணமகன் மேக்கப்

இவுங்களுக்குப் பெரிய அளவில் எந்த வேலையும் கிடையாது. மணமகளுக்கு இருப்பதுபோலவே மணமகனுக்கு பெடிக்யூர், மெனிக்யூர், ஃபேஷியல், ஹேர் கட் எல்லாம் ஒரே மாதிரிதான். அதுல கொஞ்சம் வித்தியாசம்னா தாடி, மீசையெல்லாம் இருக்கும். அதனால அதற்கு தகுந்தாற்போல மேக்கப் போட வேண்டும்.

ஆக, மணமகன்களே, மணமகள்களே… மேக்கப் போடும் முன்பு இதெல்லாம் கவனிச்சுக்கோங்க. உங்கள் அழகு உங்கள் கையில்தான்!

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு / ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

பீம் (BHIM) Android / IOS

டெஸ் (TEZ) Android / IOS

போன்பே (PhonePe) Android / IOS

பேடிஎம் (Paytm) Android / IOS

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

en.minnambalam.com/subscribe.html

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon