மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 28 மே 2020

சுவிட்சர்லாந்தில் ஸ்ரீதேவிக்குச் சிலை!

சுவிட்சர்லாந்தில் ஸ்ரீதேவிக்குச் சிலை!

மறைந்த இந்திய நடிகை ஸ்ரீதேவிக்கு சுவிட்சர்லாந்து நாட்டில் சிலை வைக்கப்படவுள்ளது.

2016ஆம் ஆண்டு இயக்குநர் யாஷ் சோப்ரா சிலை சுவிட்சர்லாந்தில் அமைக்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து நடிகை ஸ்ரீதேவியின் சிலை நிறுவப்படவுள்ளது. ஸ்ரீதேவி நடிப்பில் 1989ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘சாந்த்னி’. இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் சுவிட்சர்லாந்தில் படமாக்கப்பட்டன.

“சோப்ராவின் பல படங்கள் சுவிட்சர்லாந்தைப் பின்புலமாகக் கொண்டு உருவாகின. இந்த நாட்டைப் பற்றி இந்தியச் சுற்றுலாப் பயணிகளிடையே ஆர்வத்தைத்தூண்டும் விதமாக அவரது பணி அமைந்தது. ஸ்ரீதேவியும் தனது பங்களிப்பை வழங்கியுள்ளதால் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இங்கே சிலை அமைக்கும் பணி நடைபெறுகிறது” என இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரி ஒருவர் பிடிஐக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

1964ஆம் ஆண்டு வெளியாகிய ராஜ்குமாரின் ‘சங்கம்’ படம்தான் முதலாவதாக சுவிட்சர்லாந்தில் படமாக்கப்பட்ட இந்தியப் படமாகும். அதைத் தொடர்ந்து 1967ஆம் ஆண்டு ‘அன் ஈவ்னிங் இன் பாரிஸ்’ திரைப்படம் அங்கு உருவானது. பாலிவுட் தொடர்ந்து சுவிட்சர்லாந்தின் இயற்கை அழகைத் தனது படங்களில் பதிவு செய்துவருகிறது. யாஷ் சோப்ரா அதில் மிக முக்கியமானவர்.

அவரது பணியைப் போற்றும் விதமாக சுவிஸ் அரசு ஒரு ரயிலுக்கு அவரது பெயரைச் சூட்டியுள்ளது. அங்குள்ள ஓர் ஏரியும் அவரது பெயரால் வழங்கப்படுகிறது.

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon