மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 28 மே 2020

எண்ணெய் வித்துகளுக்கு ரூ.10,000 கோடி!

எண்ணெய் வித்துகளுக்கு ரூ.10,000 கோடி!

எண்ணெய் வித்துகளின் உற்பத்தியை மேம்படுத்துவதற்காகவும், விவசாயிகளுக்கு பாதுகாப்பளிப்பதற்காகவும் ரூ.10,000 கோடி மதிப்பிலான திட்டத்தை மத்திய அரசு அறிவிக்கவுள்ளது.

சமையல் எண்ணெய்களுக்கு இறக்குமதியை நம்பி இருக்கும் சூழல் உருவாகியுள்ளதால், எண்ணெய் வித்துகள் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ரூ.10,000 கோடி மதிப்பிலான திட்டத்தை அரசு அறிவிக்கவுள்ளது. இத்திட்டத்தின் கீழ், எண்ணெய் வித்துகளின் விலை குறைந்தபட்ச ஆதரவு விலையை விடக் குறையும்போது விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும்.

எண்ணெய் வித்துகளை உற்பத்தி செய்யும் விவசாயிகளைக் காப்பாற்ற உருவாக்கப்பட்ட மத்தியப் பிரதேச அரசின் பவந்தர் புக்தான் யோஜனா திட்டத்தைப் போலவே ஒரு புதிய விலைக் குறைபாடு கட்டணத் திட்டத்தை முன்மொழிவதற்கான அமைச்சரவைக் குறிப்பை மத்திய வேளாண் அமைச்சகம் தயாரித்து வருகிறது.

இத்திட்டத்தின் கீழ், முக்கிய மொத்த விலைச் சந்தைகளில் எண்ணெய் வித்துகளுக்கு வழங்கப்படும் சராசரி விலைக்கும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும் இடையேயான வேறுபாட்டை அரசு வழங்கும். ஒவ்வோர் ஆண்டும் 140 கோடி டன் முதல் 150 கோடி டன் வரையிலான சமையல் எண்ணெய் சரக்குகளை இந்தியா இறக்குமதி செய்கிறது. உள்நாட்டின் சமையல் எண்ணெய் தேவையில் 70 விழுக்காடு இறக்குமதி வாயிலாகப் பூர்த்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் எண்ணெய் வித்துகள் உற்பத்தியில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்கள் முன்னணியில் உள்ளன. அரசின் தகவல்படி, ஒட்டுமொத்த எண்ணெய் வித்துகள் உற்பத்தி 2017-18ஆம் ஆண்டில் 31.31 மில்லியன் டன்னாகவும், 2016-17ஆம் ஆண்டில் 31.28 மில்லியன் டன்னாகவும் இருந்துள்ளது.

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon