மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 2 ஜுன் 2020

கையகப்படுத்துதல் நடவடிக்கைகள் உயர்வு!

கையகப்படுத்துதல் நடவடிக்கைகள் உயர்வு!

சராசரியாக ஆண்டுக்கு 650 முதல் 700 நிறுவனங்கள் வரை கையகப்படுத்தப்படுவதாக இந்திய தொழில் துறைக் கூட்டமைப்பு - பிடபுள்யூசி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

இதுகுறித்து இந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: ‘கடந்த பத்து ஆண்டுகளாக இந்தியாவில் சராசரியாக ஆண்டொன்றுக்கு 650 முதல் 700 நிறுவனங்கள் வரை கையகப்படுத்தப்படுகின்றன. இதற்காகச் சராசரியாக ஆண்டொன்றுக்கு ரூ.200 கோடியிலான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 3,400க்கும் அதிகமான இந்திய நிறுவனங்கள் இணைக்கப்பட்டுள்ளன மற்றும் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் பொதுத் துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் இரண்டுமே அடங்கும்.

இதில் 900 பரிவர்த்தனைகள் மும்பை பங்குச் சந்தைகள் வழியாக நிகழ்ந்துள்ளன. ஆனால் ஒட்டுமொத்த பரிவர்த்தனையில் இது வெறும் 15 விழுக்காடுதான். இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கைகள் கடந்த 3 ஆண்டுகளில் 13.2 விழுக்காடு வளர்ச்சி கண்டு 127.3 பில்லியன் டாலராகவும், கடந்த 5 ஆண்டுகளில் 13.7 விழுக்காடு வளர்ச்சி கண்டு 182.6 பில்லியன் டாலராகவும், கடந்த 10 ஆண்டுகளில் 4 விழுக்காடு வளர்ச்சி கண்டு 348.3 பில்லியன் டாலராகவும் உயர்ந்துள்ளது. அதேசமயத்தில் இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கைகளில் அந்நிய முதலீடுகளின் பங்களிப்புகள் கடந்த 3 ஆண்டுகளில் 25 விழுக்காடாகவும், கடந்த 5 ஆண்டுகளில் 23 விழுக்காடாகவும், கடந்த 10 ஆண்டுகளில் 29 விழுக்காடாகவும் உள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon