மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 28 மே 2020

நிறம் மாறும் விழித்திரை!

நிறம் மாறும் விழித்திரை!

தினப் பெட்டகம் – 10 (10.09.2018)

நம் கண்களில் முக்கியமான ஒரு பகுதி, விழித்திரை. விழித்திரை பற்றிய சில தகவல்கள்:

1. கண்களுக்குள் எவ்வளவு ஒளி வர வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது நம் விழித்திரைதான். வெளிச்சம் குறைவான இடத்தில், விழித்திரை திறந்து அதிகமான ஒளியை உள்வாங்கும். அதிக வெளிச்சம் இருக்கும் இடத்தில், விழித்திரை சுருங்கி குறைவான ஒளியை உள்விடும்.

2. நம் கண்களில் கறுப்பு, பழுப்பு, பச்சை, நீலம் என்று மாறுபட்ட நிறங்களில் இருக்கும் பகுதிதான் இந்த விழித்திரை. விழித்திரையின் நிறம், மெலனின் என்ற பிக்மன்டால் ஏற்படுகிறது. அதிகமான மெலனின் இருப்பவர்களுக்குக் கறுப்பு அல்லது அடர் பழுப்பு நிறத்தில் விழித்திரை இருக்கும்; மெலனின் குறைவாக இருந்தால், பச்சை, நீலம், மஞ்சள், பழுப்பு நிறம் போன்ற வண்ணங்களாக இருக்கும்.

3. ஹெட்ரோக்ரோமியா (Heterochromia) என்ற ஒரு நிலை சிலருக்கு ஏற்படும் மரபு ரீதியான பிரச்சினை. இரண்டு விழித்திரைகளும் வெவ்வேறு நிறங்களில் இருக்கும்.

4. நம் கண்ணில் இருக்கும் விழித்திரை வட்ட வடிவத்தில் கண்மணி (Pupil) என்ற பகுதியைச் சுற்றி இருக்கும்.

5. கருவிழிக்குப் பின்னால், லென்ஸுக்கு முன்னால் இருப்பது விழித்திரை.

6. நம் கண்களில் மிகவும் சுவாரஸ்யமான பகுதி விழித்திரை.

7. விழித்திரை பற்றிய ஆய்வுகளையும் அது எப்படி மாறுபட்டுக்கொண்டே இருக்கிறது என்பது குறித்த ஆய்வுகளையும் Iridology என்று குறிப்பிடுவோம்.

8. விழித்திரை ஆங்கிலத்தில் Iris எனக் குறிப்பிடப்படுகிறது.

9. நம் விழித்திரையின் வண்ணத்தை மாற்றிக்கொள்ள முடியும்.

10. ஆனால், இது அழகுக்காகப் பெரும்பாலும் செய்யப்படுவது இல்லை. மாறாக, மிகக் குறைந்த அளவு மெலனின் உள்ளவர்களுக்குக் காட்சிப் பிரச்சினை ஏற்படலாம். அச்சூழல்களில்தான் இந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.

- ஆஸிஃபா

திங்கள், 10 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon