மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 2 ஜுன் 2020

நிலக்கரி உற்பத்தியில் சாதனை!

நிலக்கரி உற்பத்தியில் சாதனை!

கோல் இந்தியாவின் துணை நிறுவனமான தென்கிழக்கு நிலக்கரி துறைகள் லிமிடெட் (SECL) நிலக்கரி உற்பத்தியில் சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து SECL வெளியிட்டுள்ள அறிக்கையில், “2017-18ஆம் நிதியாண்டில் 144.71 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 3.36 மில்லியன் டன் அதிகமாகும். 2016-17ஆம் நிதியாண்டில் 140 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. 2017-18ஆம் நிதியாண்டில் உற்பத்தி செய்யப்பட்ட 144.71 மில்லியன் டன் என்பது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சமாகும்.

அதுமட்டுமின்றி கோல் இந்தியா நிறுவனத்தின் மற்ற துணை நிறுவனங்களைக் காட்டிலும் இது மிகவும் அதிகமாகும். கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் துணை நிறுவனங்கள், கோல் இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 21 விழுக்காடு பங்கு கொண்டுள்ளன” என்று கூறியுள்ளது. SECL நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் 75 திறந்தவெளி மற்றும் நிலத்தடி சுரங்கங்கள் உள்ளன.

இதில் திறந்தவெளி சுரங்கங்களில் 3.83 விழுக்காடு வளர்ச்சியுடன் 130.25 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஆனால் நிலத்தடி சுரங்கங்களில் 0.62 விழுக்காடு சரிவுடன் 14.46 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. “நிலக்கரி விநியோகமும் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 9.17 விழுக்காடு அதிகரித்துள்ளது. 2016-17ஆம் நிதியாண்டில் 137.66 மில்லியன் டன் நிலக்கரி மட்டுமே விநியோகம் செய்யப்பட்டிருந்த நிலையில், 2017-18ஆம் நிதியாண்டில் 150.28 மில்லியன் டன் நிலக்கரி விநியோகம் செய்யப்பட்டுள்ளது” என்றும் SECL நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஞாயிறு, 9 செப் 2018

chevronLeft iconமுந்தையது