மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 22 அக் 2020

தென்மாநிலங்களில் அதிகளவில் தற்கொலைகள்: ஆணையர்!

தென்மாநிலங்களில் அதிகளவில் தற்கொலைகள்: ஆணையர்!

இந்தியாவிலேயே புதுச்சேரி, தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில்தான் அதிக தற்கொலைகள் நடைபெறுகிறது என சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

நாளை நாடு முழுவதும் சர்வதேச தற்கொலை தடுப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளை முன்னிட்டு, சென்னை மயிலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று(செப்டம்பர் 9) நடைபெற்றது. தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, மீண்டு வந்தவர்கள் பலரும் பங்கேற்றனர். இதில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். ஒவ்வொருவரும் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கலந்து கொண்டு நினைவுப் பரிசுகளை வழங்கினார். இதைத் தொடர்ந்து,அவர் பேசியபோது, உடல் நலத்தைப் பேணுவதுபோல, மனநலத்தையும் பேண வேண்டும். உலக அளவில் இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் 17 சதவிகித தற்கொலைகள் நடப்பதாகவும், இந்தியாவில் புதுச்சேரி, தமிழகம் மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில்தான் அதிக தற்கொலைகள் நடைபெறுவதாகவும் வேதனை தெரிவித்தார்.

ஞாயிறு, 9 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon