விஜய், அஜித் வரிசையில் விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
முன்னணி இயக்குநர்களின் படம் முதல் அறிமுக இயக்குநர்கள் இயக்கும் படம் வரை வகைதொகையில்லாமல் தொடர்ச்சியாகப் பல படங்களில் நடித்துவருபவர் விஜய் சேதுபதி. எப்போதுமே அரை டஜன் படங்களைத் தனது கையில்வைத்து நடித்துவரும் இவர், இயக்குநர் விஜய் சந்தர் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். முன்னதாக விக்ரம் நடித்த ‘ஸ்கெட்ச்’ படத்தை இயக்கியதையடுத்து இந்தப் படத்தை இயக்குகிறார் விஜய் சந்தர்.
பிரபல தயாரிப்பு நிறுவனமான விஜயா புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி பட நிறுவனங்களுள் ஒன்றான விஜயா புரொடக்ஷன் விஜய்யின் பைரவா, அஜித்தின் வீரம் போன்ற படங்களைச் சமீபத்தில் தயாரித்திருந்தது. அந்த வரிசையில் தற்போது விஜய் சேதுபதியும் இணைந்துள்ளார்.