மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 25 மே 2020

அலறலின் பின்னணியில் ‘ஆடை’!

அலறலின் பின்னணியில் ‘ஆடை’!

நடிகை அமலா பால் நடிக்கும் ஆடை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு இணையத்தில் கவனம் பெற்றுவருகிறது.

வைபவ், பிரியா பவானி சங்கர், இந்துஜா ஆகியோரின் நடிப்பில் 2017ஆம் ஆண்டு வெளியான படம் மேயாத மான். பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக அறிமுகமான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ரொமான்டிக் காமெடி படமான இதில் இடம்பெற்ற ‘வீட்டுக் குத்துவிளக்கு’ எனும் பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்து நல்ல வரவேற்பைப் பெற்றது. படத்தை ரத்னகுமார் எனும் அறிமுக இயக்குநர் இயக்கினார்.

இந்த நிலையில் அந்தப் படத்தை அடுத்து ‘ஆடை’ எனும் படத்தை அவர் தற்போது இயக்கிவருகிறார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, பிரதீப் குமார் இசையமைக்கிறார். வி ஸ்டுடியோஸ் நிறுவனம் இதைத் தயாரிக்கிறது. கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள இந்தப் படத்தில் நடிகை அமலா பால் பிரதான ரோலில் நடிக்கிறார்.

இந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று (செப்டம்பர் 4) வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபு இதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அரைகுறை ஆடையோடு உடம்பில் காயங்களுடனும் கையில் இரும்புப் பைப்புடனும் தோன்றும் அமலா பால் எதைப் பார்த்தோ அலறுவதுபோல சித்திரிக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர் இணையத்தில் கவனம் பெற்றுவருகிறது.

செவ்வாய், 4 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon