மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 6 ஜூலை 2020

சிறப்புத் தொடர்: இவர்களைப் புறந்தள்ளுங்கள்!

சிறப்புத் தொடர்: இவர்களைப் புறந்தள்ளுங்கள்!

வெண்பா கீதாயன்

நீ கூடிடு கூடலே - 48: உறவுகளை அலசும் தினசரி தொடர்

சுயவதையும் பிளாக்மெயிலும் காதலின் நுண்ணரசியலில் பெரிதும் பங்கேற்பவை. சுயவதையில் ஈடுபடுகின்ற பெண்களைப் போலவே ஆண்களும் இருக்கின்றனர். இவர்கள் எதற்கெடுத்தாலும் கைகளை அறுத்துக் கொள்வது, சூடுவைத்துக் கொள்வது, தற்கொலை செய்துகொள்வேன் என்று மிரட்டிக் கொஞ்சமாக எதையாவது தின்றுவிட்டு சாகாமல் உயிரை எடுப்பது போன்ற செயல்களை அரங்கேற்றிக்கொண்டே இருப்பார்கள்.

இந்தப் பழக்கம் பள்ளிக் காலத்திலேயே தொடங்கி விடுகிறது. இவர்களின் அடிப்படை உளவியல், அனைவரையும் பயமுறுத்திக் காரியத்தைச் சாதித்துக்கொள்வதே தவிர, வேறெதுவும் கிடையாது. அதில் சில சமயம் அசம்பாவிதமாக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

காதலில் ரத்தத்தால் கடிதம் எழுதுவது என்பது உன்னதமான புனிதச் செயலாகக் கருதப்படுகிறது. இன்று அவ்வாறு எழுதுவது எப்போதாவது செவிவழிச் செய்தியாக வருவதுண்டு. ஆனால் பிளேடால் கீறிக் கையில் காதலன்/லியின் பெயரெழுதுதல் நடைமுறை சுயவதைகளுள் முக்கியமான ஒன்று. காதலைக் காட்டுவதற்கே இம்மாதிரி ஒவ்வொரு முறையும் ரத்தம் சிந்துவார்கள்.

பிரச்சினை என்று வந்துவிட்டால் சுயவதையில் இறங்குவது இவர்களுக்கு வாடிக்கையான ஒன்று. காதலனுடன் ஊடல் என்றால் உண்ணாநோன்பு இருப்பது, காதலன் திட்டினால் கையை அறுத்துக்கொள்வது, காதலி சண்டைபோட்டால் கையைக் கீறிக்கொள்வது என்று நாம் எதிர்பார்க்காத அளவுக்கு விபரீதங்களை மேற்கொள்கின்றனர்.

பிளாக்மெயில் கோஷ்டி எந்நேரமும் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன் என்று கதறிக்கொண்டிருக்கும். இவர்கள் இதே தொனியில் பலவித பிளாக்மெயில்களில் இறங்குவர். சின்ன விஷயத்தைக்கூட பிளாக்மெயிலால் சாதித்துக்கொள்வதென மிக மலினமாக நடந்துகொள்வார்கள்.

சுயவதை மற்றும் பிளாக்மெயில் கோஷ்டிக்கு இவ்வாறு ஒவ்வொரு முறையும் நீங்கள் மிரட்டும்போது ஒருகட்டத்தில் ‘இது இப்படித்தான்’ என்கிற அக்கறையின்மை தோன்றுகிறது. அறுத்தியா, அறுத்துக்கோ என்கிற மனப்போக்கிற்குத் தள்ளுகிறீர்கள். விளையாட்டு வினையாகும் என்பதுபோல சில சமயங்களில் நீங்கள் எதிர்பாராத நிகழ்வுகள் நடந்துவிடும். பொதுவாகத் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்பவர்கள் முதலில் பாவனைக்காகவே மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குச்சியைப் பொருத்தியபடி மிரட்டிப்பார்க்கின்றர். ஒரு நொடியில் அவர்களையும் அறியாமல் மொத்தமாகப் பற்றிக் கருகிவிடுகின்றனர். ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்காது.

இப்படியான மனப்பிறழ்வு கொண்டவர்களைக் காதலிப்பவர்கள், இது நிச்சயமாகக் காதலில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இது ஒரு மனச்சிதைவு; மனநல சிகிச்சை தேவைப்படுகிற பிறழ்நிலை. எனவே ஒருபோதும் சுயவதைகளை ஊக்குவிக்காதீர்கள். இப்படிப்பட்டவர்களை முற்றிலும் புறந்தள்ளுங்கள். ஏனெனில் சுயவதைகளிலும் பிளாக்மெயில் செய்வதிலும் குற்றங்கள் மிக அதிகம். நம்மீது தவறாகவே இருந்தாலும் இத்தகையவர்களைப் “போய்த் தொலை” என்று சொல்லிப்பாருங்கள். முடிந்த அளவுக்குக் கண்டுகொள்ளாமல் இருங்கள்.

இல்லை, இத்தகைய வெறிமிக்க காதல்தான் வேண்டுமென்றால் மருத்துவமனை, காவல் நிலையம், நீதிமன்றம், சிறை போன்ற இடங்களுக்குச் செல்ல தயாராகிக் கொள்ளுங்கள்.

(காதல் தொடரும்)

(கட்டுரையாளர்: வெண்பா கீதாயன் எழுத்தாளர். சமகால நிகழ்வுகள், இலக்கியம், உளவியல், சமூகம் சார்ந்த கருத்துகளைப் பல்வேறு ஊடகங்களில் எழுதிவருகிறார்.)

.

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு / ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

பீம் (BHIM) Android / IOS

டெஸ் (TEZ) Android / IOS

போன்பே (PhonePe) Android / IOS

பேடிஎம் (Paytm) Android / IOS

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

en.minnambalam.com/subscribe.html

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477

புதன், 5 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon