மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 5 ஆக 2020

மீச்சிறு காட்சி 8: எளிமையின் அழகு!

மீச்சிறு காட்சி 8: எளிமையின் அழகு!

சந்தோஷ் நாராயணன்

கலையோடு வாழ்வை இணைத்துப் பேசும் சிறப்புத் தொடர்

கடந்த அத்தியாயத்தில் கட்டடங்கள் மற்றும் ஃபர்னிச்சர் வடிவமைப்பில் மினிமலிசப் பாணியை ஆரம்பித்து வைத்தவர்கள் பற்றிப் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக நம்மூரில் தலைசிறந்த கட்டடக் கலைஞராக விளங்கிய லாரி பேக்கரைப் (Laurie Baker) பற்றிச் சொல்ல விரும்புகிறேன்.

லாரி பேக்கர் தன்னை மினிமலிசப் பாணி கட்டட வடிவமைப்பாளர் என்று ஒருபோதும் சொல்லிக்கொண்டதில்லை. நீடித்திருக்கும் தன்மை கொண்ட, மரபையும் சூழலையும் கருத்தில் கொண்ட கட்டுமானங்களுக்கு முக்கியத்துவம் அளித்தே தன் படைப்புகளை இவர் உருவாக்கினார். ஆனால், மினிமலிசப் பாணியின் கூறுகள் அவர் படைப்புகளில் இருப்பதை நான் பார்க்கிறேன்.

நிலமும் மக்களும் உருவாக்கிய படைப்பாளி

பிரிட்டனில் பிறந்த லாரி பேக்கர் பிரிட்டிஷ் காலனியாட்சி காலத்தில் இந்தியா வந்தார். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பணியாளராக அரசு கட்டடங்களைக் கட்டிக்கொடுப்பதற்காக வந்த இளம் கட்டட வடிவமைப்பாளர் அவர். தொடக்கக் காலத்தில் இந்திய நிலம் முழுவதும் அரசு வேலையாகக் குறுக்கும் நெடுக்கும் பயணித்த அவர் காந்தியின் சிந்தாந்தால் கவரப்பட்டார். ஒரு கட்டட வடிவமைப்பாளராக வந்திறங்கிய அவரை இந்திய நிலமும் அதன் மக்களும் சாதாரண ஒரு அசாதாரண படைப்பாளியாக மாற்றிவிட்டனர் என்று சொல்வேன்.

காந்தியிடமிருந்து அவர் உள்வாங்கிக்கொண்ட எளிமை, சூழல் சார்ந்த பார்வை போன்றவை அவரது சிந்தனையிலும் கட்டட வடிவமைப்பிலும் செல்வாக்கு செலுத்த ஆரம்பித்தன. இந்திய விடுதலைக்குப் பிறகு கேரளப் பெண்ணை மணம் செய்துகொண்ட அவர், இறக்கும்வரை கேரளாவிலேயே வாழ்ந்தார். அவருடைய மரபு சார்ந்த, சூழலியல் பார்வையுடன் கூடிய, ஆன்மிகமான கட்டட வடிவமைப்புக்கு உகந்த நிலமாகக் கேரளா அவருக்குத் தோன்றியது.

கட்டட உருவாக்கத்தில் மினிமலிசத்தின் பால பாடமான தேவையற்ற விஷயங்களை முதலில் தவிர்த்தார். முடிந்த அளவுக்கு சிமென்டின் பயன்பாட்டைக் குறைத்தார். ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட மரபான பொருட்களை மறுகட்டுமானம் செய்தார். சூழலுக்கு எந்தக் கெடுதியும் ஏற்படாத பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார். குறிப்பாக, கட்டடங்கள் கட்டுகின்ற நிலத்திலிருந்தும் அதன் அருகிலிருந்தும் கிடைக்கும் கல், மண், மரம் போன்ற பொருட்களை மட்டுமே கட்டுமானத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்றார். இது அடிப்படையில் காந்தியப் பொருளாதாரச் சிந்தனைக்கு ஒப்பானது.

கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்துவது முதல் கட்டட வடிவமைப்பு வரை எளிய, தேவையற்ற ஆடம்பரங்களைத் தவிர்த்த, கட்டுமானப் பொருட்களுக்கு நிறுவனங்களைச் சார்ந்திருக்காத என்று அவருடைய செயல்பாடு முழுக்கத் தற்சார்பை அடிப்படையாகக் கொண்டிருந்தது. செங்கற்களின் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் இருந்தது அவர் கண்டுபிடித்த rat trap bond பாணி சுவர் கட்டுமானம். காற்றுக்கும் வெளிச்சத்துக்கும் மின்சாரத்தை முழுவதும் நம்பி இருக்காமல் இயற்கையாகக் கிடைக்கக்கூடிய காற்றையும் வெளிச்சத்தையும் கட்டடங்களுக்குள் அனுமதிக்கும் வகையில் இருந்த அவரது வடிவமைப்புகள்.

அழகியலாகவும் கட்டட அறிவியலாகவும் பார்த்தால் தேவையற்ற ஆடம்பரங்களை, செலவுகளைக் குறைத்த மினிமலிச வாழ்முறையின் ஒரு பகுதியாக அவருடைய படைப்புகள் இருக்கின்றன. மிகவும் வீடற்ற மக்களுக்குக் குறைந்த செலவில் வீடுகள் கட்டிக்கொடுக்கும் அரசுத் திட்டங்களுக்குத் தனது ஆற்றலைப் பயன்படுத்தியவர் அவர். இன்றளவும் கேரள அரசின் மக்களுக்கான பல தொகுப்பு வீடுகள் அவரது கட்டுமானப் பாணியைக் கொண்டு நீடித்து நிற்கின்றன.

மதில் சுவர்கள் தேவையா?

கேரள நிலம் தமிழ்நாட்டைப்போன்ற சமதள பூமி அல்ல. மேடுகளும் பள்ளங்களுமாக அமைந்த மலைகளின் எச்சம் அது. சென்னை போன்ற நகரங்களில் பத்து நிமிட மழைக்கே தண்ணீர் தேங்குவது போல கேரளாவில் தேங்கி நிற்பதில்லை. எளிதில் வெள்ளம் பாய்ந்து ஓடி வடிந்துவிடும். ஆனால், கடந்த கேரள வெள்ளப் பெருக்கின் போது ஆய்வாளர்களால் குறிப்பிடப்பட்ட விஷயங்களில் ஒன்று, தண்ணீர் வேகமாக ஓடிச் செல்ல முடியாதபடி வீடுகளைச் சுற்றிக் கட்டியிருந்த காங்கிரீட் அல்லது சிமென்ட் கட்டைகளால் கட்டப்பட்டிருந்த மதில் சுவர்கள். கேரளாவில் பெரும்பாலான வீடுகள் நல்ல இடைவெளிகளில் அமைந்தவை. ஆகவே எல்லா வீடுகளுக்கும் மிகப் பெரிய பரந்த மதில் சுவர்கள் உண்டு. தண்ணீரின் ஓட்டத்தைத் தடை செய்ததில் ஊருக்குள் தண்ணீர் தேங்கியதில் இந்த மதில்களுக்கும் பெரும் பங்குண்டு.

நமது மரபில் மதில் சுவர்களுக்குத் தேவை இல்லை. வீட்டுக்கோ, விளை நிலங்களுக்கோ பாதுகாப்புக்கு வேலிகள் மட்டுமே இருக்கும். அவையும் பிரண்டை போன்ற செடிகள் படர்ந்த கள்ளி, கொன்றை போன்ற தாவரங்களாலான உயிர் வேலிகளாகத்தான் இருக்கும். மீறிப்போனால் களிமண்ணாலான மண்சுவர் கொண்ட மதில்கள் இருந்திருக்கலாம். வெள்ளப் பெருக்கு போன்ற சமயங்களில் அப்படிப்பட்ட மதில்கள் சூழலுக்கு ஒத்திசைவுடன் இயங்கவும் செய்யும். அதீதமாகத் தண்ணீர் தேங்குவது போன்ற அபத்தங்கள் நடக்க வாய்ப்பு மிகக் குறைவு. லாரி பேக்கரின் கட்டட வடிவமைப்பில் பெரும்பாலும் மதில்கள் இல்லை.

லாரிபேக்கரின் படைப்பில் வெளியும், தாவரங்களும், இயற்கையின் கொடைகளும் தவிர்க்கப்பட்டதில்லை. மரங்களை வெட்டி எறியாமல் கட்டடத்தின் பகுதியாக அந்த மரங்களை உள்வாங்கிக்கொண்டு வடிவமைத்தவர் அவர்.

மினிமலிசம் என்பது வெறும் கலை வெளிப்பாடு மட்டுமல்ல அது ஒரு வாழ்வியல் முறை. அந்த நோக்கில் லாரி பேக்கரின் கலையை மினிமலிசப் பார்வையில் “எளிமையின் அழகியல்” என்று சொல்வேன்.

(காண்போம்)

(கட்டுரையாளர் சந்தோஷ் நாராயணன், ஓவியர், அட்டைப்பட வடிவமைப்பாளர், விளம்பர வடிவமைப்பாளர், எழுத்தாளர். இவரைத் தொடர்புகொள்ள: [email protected])

முந்தைய அத்தியாயங்கள்:

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.

மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.

மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!

சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு / ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...

1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.

பீம் (BHIM) Android / IOS

டெஸ் (TEZ) Android / IOS

போன்பே (PhonePe) Android / IOS

பேடிஎம் (Paytm) Android / IOS

2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.

en.minnambalam.com/subscribe.html

3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.

.

சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477

செவ்வாய், 4 செப் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon