மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 28 மே 2020

பாலியல் வீடியோக்கள் மீது குற்றப்பதிவு அமைப்பு நடவடிக்கை!

பாலியல் வீடியோக்கள் மீது  குற்றப்பதிவு அமைப்பு நடவடிக்கை!

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத்தூண்டும் வீடியோக்கள், இணைய தளங்கள் ஆகியவற்றை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேசிய குற்றப் பதிவு அமைப்பிற்கு அதிகாரம் அளிப்பதற்கு மத்திய அரசு ஆலோசித்து வருவதாக அந்த அமைப்பின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் தேசிய குற்றப்பதிவு அமைப்பின் அதிகாரிகள், மின்னணு மற்றும் தகவல் தொழி்ல் நுட்பத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், உளவுத்துறை இயக்குனர் உள்ளிட்ட உயர் மட்ட அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டம் ஒன்று நேற்று(21.818) டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான ஆபாசப்படங்கள் குறித்து மத்திய அரசு நிறுவனங்கள் பெறும் புகார்களை தேசிய குற்றப்பதிவு அமைப்பு கண்காணிக்கவும் அது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்கவும் அந்த அமைப்பினை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேசிய குற்றப்பதிவு அமைப்பின் அதிகாரி ஒருவா் பத்திரிகையாளர்களிடம் பேசியபோது கூறுகையில், நாங்கள் குற்றப்பதிவு அமைப்பாக மட்டுமே செயல்படுகிறோம். ஆனால் தற்போது மத்திய அரசு தகவல் தொழில் நுட்ப சட்டத்தின்படி ஆபாச வீடியோக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது எனத்தெரிவித்துள்ளார்.

புதன், 22 ஆக 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon