மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 15 ஆக 2018

ஸ்டார்ட் அப் துறையில் குவியும் முதலீடு!

ஸ்டார்ட் அப் துறையில் குவியும் முதலீடு!

இந்தியாவின் ஸ்டார்ட் அப் துறையில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் ஜூலை மாதத்தில் 2.42 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

ஆய்வு நிறுவனமான வெஞ்சர் இண்டலிஜென்ஸ் வெளியிட்டுள்ள இது தொடர்பான அறிக்கையில், 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த ஆண்டில்தான் ஸ்டார்ட் அப் துறையில் அதிகளவில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதாவது, 2015ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் ஸ்டார்ட் அப் துறையில் மொத்தம் 2.79 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அதைத் தொடர்ந்த 2016ஆம் ஆண்டின் ஜூலையில் 878 மில்லியன் டாலரும், 2017 ஜூலையில் 1.5 பில்லியன் டாலரும் மட்டுமே முதலீடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் 2015ஆம் ஆண்டை விட 13 சதவிகிதம் குறைவாகவே உள்ளன.

அதிகபட்சமாக வேளாண் தொழில் துறையில் 1,233 மில்லியன் டாலர் மதிப்பிலான முதலீடுகள் இந்த ஆண்டின் ஜூலை மாதத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2015 ஜூலையில் இதன் அளவு 133 மில்லியன் டாலராக மட்டுமே இருந்தது. அதேநேரம் தகவல் தொழில்நுட்பத் துறையில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் 1,449 மில்லியன் டாலரிலிருந்து 458 டாலராகக் குறைந்துள்ளன. வங்கி மற்றும் நிதிச் சேவைகள் துறையில் 230 மில்லியன் டாலரும், சுகாதாரம் மற்றும் வாழ்க்கை அறிவியல் துறையில் 170 மில்லியன் டாலரும், கல்வித் துறையில் 101 மில்லியன் டாலரும், இதர துறைகளில் 245 மில்லியன் டாலரும் முதலீடு செய்யப்பட்டுள்ளன.

புதன், 15 ஆக 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon