மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 10 ஆக 2018

முக்கிய கட்டத்தில் திமுக செயற்குழு!

முக்கிய கட்டத்தில் திமுக செயற்குழு!

திமுக தலைவர் கலைஞர் மறைவுக்குப் பின் அக்கட்சியின் செயற்குழு வரும் ஆகஸ்டு 14ஆம் தேதி அறிவாலயத்தில் கூடுகிறது. இன்று (ஆகஸ்டு 10) செயல் தலைவர் ஸ்டாலின் திமுகவின் பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் வீடு தேடிச் சென்று சந்தித்தார். அப்போது இதுகுறித்தான முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

கலைஞர் ஓய்வில் இருந்த கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக ஸ்டாலின் செயல் தலைவராக இருந்து பணிகளை கவனித்து வந்தார். இப்போது கலைஞர் மறைந்தபின் அடுத்த திமுக தலைவர் யார் என்பதையும், அது தொடர்பான அடுத்த கட்ட நிர்வாகிகளையும் தேர்ந்தெடுக்க வேண்டியது பற்றி விவாதங்கள் ஆரம்பித்துவிட்டன.

இந்த நிலையில் வரும் 14ஆம் தேதி கூட்டப்படும் செயற்குழுவில் கலைஞருக்கு அஞ்சலி செலுத்துவது மட்டுமே அஜெண்டா என்று தலைமைக் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் ஸ்டாலின் எப்போது தலைவர் பதவி ஏற்பார், அவர் தலைவர் ஆனால் திமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் யார், அடுத்தடுத்த நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு திமுகவில் ஏற்பட்டிருக்கிறது.

வெள்ளி, 10 ஆக 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon