மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 ஜூலை 2018

முடிவுக்கு வந்த லாரி உரிமையாளர்கள் போராட்டம்!

முடிவுக்கு வந்த லாரி உரிமையாளர்கள் போராட்டம்!

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து, டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் இன்று (ஜூலை 12) வாபஸ் பெறப்பட்டது.

டீசல் விலை உயர்வு, இன்ஷ்யூரன்ஸ் கட்டணம், சுங்கச் சாவடி கட்டணம், உதிரி பாகங்கள் விலை உயர்வு ஆகியவற்றால் டேங்கர் லாரிகளை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது எனக் கூறி டேங்கர் லாரி உரிமையாளர்கள் லாரி வாடகையை உயர்த்தி தரக் கோரி கடந்த மூன்று நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சென்னை புறநகர் பணிமனைகளுக்கு பெட்ரோல், டீசல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், வேலைநிறுத்தத்துக்குத் தடை விதிக்கக் கோரி இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர் நாராயண ராவ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

புது டெண்டர் விதிகள் எந்த விதத்திலும் தற்போதைய ஒப்பந்ததாரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதை ஏற்றக்கொண்ட நீதிபதி டி.ராஜா, லாரி உரிமையாளர்கள் போராட்டத்துக்குத் தடை விதித்தார்.

நீதிமன்ற உத்தரவையடுத்து, டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

வியாழன், 12 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon