மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 ஜூலை 2018

கிரிக்கெட்: திண்டுக்கல்லை வீழ்த்திய திருச்சி!

கிரிக்கெட்: திண்டுக்கல்லை வீழ்த்திய திருச்சி!

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி வீழ்த்தியது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் மூன்றாவது சீசன் நேற்று(ஜூலை 11) ஆரம்பமானது. திருநெல்வேலியில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திண்டுக்கல் அணியின் கேப்டன் அஸ்வின் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய திண்டுக்கல் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரோஹித் 46 ரன்களும், கேப்டன் அஸ்வின் 42 ரன்களும் சேர்த்தனர்.

பின்னர் அடிய திருச்சி அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கைக் கடந்தது. சுரேஷ் குமார் 45 ரன்களுடனும், சஞ்சய் 11 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றி குறித்து பேசிய திருச்சி வாரியர்ஸ் அணியின் கேப்டன் பாபா இந்திரஜித், "173 ரன்கள் என்பது இந்த ஆடுகளத்தில் சிறந்த ஸ்கோர்தான். இதனால் விக்கெட்டுகளை கையில் வைத்திருக்க வேண்டும் என்று விரும்பினோம். ஆனால் 87 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். வெற்றி பெறுவது நடைமுறையில் சாத்தியம் இல்லை என்பது தெரிந்தும் எனக்கு நம்பிக்கை இருந்தது. கடைசி 5-6 ஓவரில் நாங்கள் சிறப்பாக ஆடினோம். எல்லாம் நல்லபடியாக அமைந்தது. இந்த வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. சுரேஷ் குமாரின் ஆட்டம் சிறப்பாக இருந்தது" என்று கூறினார்.

நாளை நடைபெறும் இரண்டாவது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

வியாழன், 12 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon