மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 ஜூலை 2018

‘விதி’யை மீறிய வீராங்கனை!

‘விதி’யை மீறிய வீராங்கனை!

நெதர்லாந்து பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனை ராபின் ரிஜ்கே விதிகளை மீறி பந்துவீசியதால் இனி பந்துவீச அவருக்குத் தடை வழங்கப்பட்டிருக்கிறது.

பெண்கள் உலகக்கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் நெதர்லாந்து அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் மோதியது. அதில், நெதர்லாந்து அணியின் ராபின் ரிஜ்கே ஐசிசியின் பந்து வீச்சு விதிகளுக்குப் புறம்பாக பந்து வீசியதாகக் கூறப்பட்டது. ஆனால், அந்தப் போட்டி வீடியோ எடுக்கப்படவில்லை எனும் காரணத்தால் அதிகாரபூர்வமாக பந்துவீச்சாளரை எதுவும் செய்ய முடியவில்லை.

எனவே, அடுத்து நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் அவரது பந்துவீச்சு கவனிக்கப்பட்டது. அதில் அவர், விதிகளை மீறி பந்து வீசுவது உறுதி செய்யப்பட்டது. எனவே ஐசிசி விதி 6.7இன்படி ஐசிசியின் பந்து வீச்சு பயிற்சிக்குச் சென்று, சரியான முறையில் பந்து வீசுகிறார் எனும் ஐசிசி சான்றிதழைப் பெறும் வரைக்கும் எந்தவிதமான போட்டிகளிலும் பந்து வீசக் கூடாது என அவருக்குத் தடை விதித்துள்ளது.

வியாழன், 12 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon