மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 ஜூலை 2018

சோனி எக்ஸ்பீரியாவின் புதிய போன் அறிமுகம்!

சோனி எக்ஸ்பீரியாவின் புதிய போன் அறிமுகம்!

சோனி எக்ஸ்பீரியா எக்ஸ் ஏ2 ப்ளஸ் எனும் புதிய செல்போன் மாடல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

லண்டனில் நேற்று (ஜூலை 11) சோனி எக்ஸ்பீரியா தங்களது எக்ஸ் ஏ 2 ப்ளஸ் எனும் செல்போனை அறிமுகப்படுத்தியுள்ளனர். பிளாக், கிரீன், கோல்டு, சில்வர் வண்ணங்களில் வெளியாகவுள்ள இந்த போன்கள் ஆகஸ்ட் இறுதியில் விற்பனைக்கு வரவுள்ளது.

சிறப்பம்சங்கள்

6இன்ச் திரை, ஆண்ட்ராய்டு அவுட் ஆஃப் தி பாக்ஸ் இயங்குதளம், Snapdragon 630 SoC, 4GB RAM+ 32GB ROM, 6GB RAM + 64GB ROM, 23 மெகா பிக்சல் கேமரா, 4 கே வீடியோ,3,580mAh பேட்டரி ஆகிய வசதிகள் இதில் உள்ளன. இத்துடன் வேகமாக சார்ஜ் செய்யும் வசதியும் இதில் உள்ளது. இந்த மாடலின் விலை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

வியாழன், 12 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon