மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 ஜூலை 2018

கூடங்குளம் போராட்டம் தற்காலிக வாபஸ்!

கூடங்குளம் போராட்டம் தற்காலிக வாபஸ்!

கூடங்குளம் அணுமின் நிலையத்தைக் கண்டித்து பொதுமக்கள் நடத்த இருந்த போராட்டம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

1991ஆம் ஆண்டு நடந்த கருத்துக்கேட்புக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுப்படி, அணுமின் நிலையம் அமைக்க இடம் வழங்கியவர்களுக்குப் பணி வழங்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை மீறி அணுமின் நிலைய நிர்வாகம் நடப்பதால், வரும் 16ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தையில் ஒரு வாரத்தில் முடிவு செய்யப்படும் என அரசு தரப்பில் கூறப்பட்டதால் போராட்டம் நிறுத்திவைக்கப்படுவதாகப் பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில் பொது அமைதியைக் கருத்தில்கொண்டு வரும் 23ஆம் தேதி வரை போராட்டம், பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக மாநகரக் காவல் ஆணையர் மகேந்திரகுமார் ரத்தோ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 12 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon