மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 ஜூலை 2018

டாய்லெட் க்ளீன்: மாணவர்களை துன்புறுத்திய ஆசிரியர்!

டாய்லெட் க்ளீன்: மாணவர்களை துன்புறுத்திய ஆசிரியர்!

அரசு பள்ளி மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்வது போன்ற வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்வது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியிருந்தது. விசாரித்ததில் அந்த சம்பவம் கர்நாடகாவில் நடந்தது தெரியவந்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெல்காவி மாவட்டத்தில் ஷிரதன கிராஸ் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் ஆசிரியர்கள் பயன்படுத்தும் கழிவறையை மாணவர்கள் 2 பேர் சுத்தம் செய்துள்ளனர்.

அதைப்பார்த்ததும் கட்டுமான தொழிலாளி ஒருவர், தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூகவலை தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தகவல் அறிந்து, மாணவர்களிடம் இதுபற்றி கேட்டபோது, ஆசிரியர்கள்தான் சுத்தம் செய்யுமாறு கூறியதாக தெரிவித்த காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளன.

வியாழன், 12 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon