மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 ஜூலை 2018

உலகப் புகழ்பெற்ற இளம் போராளி!

உலகப் புகழ்பெற்ற இளம் போராளி!

தினப் பெட்டகம் – 10 (12.07.2018)

பெண்கள் கல்வி கற்கும் உரிமைக்காகப் போராடிவருபவர்களுள் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்தவர் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா யூசப்சையி. இன்று (ஜூலை 12) 21 ஆண்டுகளைப் பூர்த்திசெய்யும் இவரைப் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.

1. 11 வயது முதல், பெண்களுக்கான கல்வி உரிமையைப் பற்றிப் பேசி, அதற்குப் போராடிவருகிறார் மலாலா.

2. 2011ஆம் ஆண்டு பாகிஸ்தானின் இளைஞருக்கான தேசிய அமைதி பரிசைப் பெற்றார் மலாலா.

3. 2013ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடாளுமன்றம் இவருக்கு Sakharov Prize for Freedom of Thought வழங்கியது.

4. 2014ஆம் ஆண்டில், 17 வயதில் அமைதிக்கான நோபல் பரிசு வெல்லும் மிகச் சிறிய வயதுடையவராக இருந்தார்.

5. ஆரம்பத்தில் மருத்துவராக வேண்டும் என்பது மலாலாவின் கனவாக இருந்தது. ஆனால், இப்போது அரசியலில் ஆர்வம்காட்டுகிறார்.

6. மலாலாவிற்கு எதிராக நிகழ்ந்த கொடூரமான கொலைத் தாக்குதலால், பாகிஸ்தான் அரசு தன் முதல் கல்வி உரிமைச் சட்டத்தை இயற்றியது.

7. இன்று வரை மலாலா, 40 விருதுகளையும் கௌரவப் பட்டங்களையும் பெற்றிருக்கிறார்.

8. 2015ஆம் ஆண்டு ஒரு asteroidக்கு மலாலாவின் பெயர் சூட்டப்பட்டது.

9. ஏப்ரல் 2017இல், ஐநாவின் அமைதித் தூதராக நியமிக்கப்பட்டார் மலாலா.

10. மலாலாவின் பிறந்த நாளான ஜூலை 12ஆம் தேதியை மலாலா தினமாக 2014ஆம் ஆண்டு, ஐநா சபை அதிகாரபூர்வமாக அறிவித்தது.

- ஆஸிஃபா

வியாழன், 12 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon