மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 ஜூலை 2018

ஸ்ரீ ரெட்டியின் அடுத்த ஸ்கெட்ச் யாருக்கு?

ஸ்ரீ ரெட்டியின் அடுத்த ஸ்கெட்ச் யாருக்கு?

தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி, ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு தற்போது சர்ச்சையாகியுள்ளது.

படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகளைப் படுக்கைக்கு அழைப்பதாக நடிகை ஸ்ரீ ரெட்டி தொடர்ச்சியாகப் பல புகார்களைக் கூறி வந்தார். இதனால் ஒட்டுமொத்த தெலுங்கு சினிமாவும் அதிர்ந்து கிடந்தது. அந்த வகையில், “தெலுங்கு மட்டுமில்லாது தமிழ் இயக்குநர் ஒருவராலும் பாலியல் தொல்லைக்கு ஆளானேன். விரைவில் அதைத் தெரிவிப்பேன்” எனச் சில தினங்களுக்கு முன்பு கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் நடிகை ஸ்ரீ ரெட்டி. இயக்குநர் பெயர் குறிப்பிடாததால் அது யாராக இருக்கும் எனத் தெரியாமலேயே இருந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று (ஜூலை 11) அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி. அதில், “தமிழ் இயக்குநர் முருகதாஸ் ஜி, எப்படி இருக்கிறீர்கள்? க்ரீன் பார்க் ஹோட்டல் ஞாபகம் இருக்கிறதா? வெலிகொண்டா ஸ்ரீனிவாஸ் மூலம் நாம் அறிமுகம் ஆனோம். நீங்கள் எனக்குப் படவாய்ப்பு தருவதாகக் கூறியிருந்தீர்கள். ஆனால் அதன் பின் இதுவரைக்கும் எந்த வாய்ப்பையுமே அளிக்கவில்லை. நீங்கள்கூட ஒரு பெரிய மனிதர்” எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

பாலியல் தொல்லை கொடுத்த தமிழ் இயக்குநரை விரைவில் வெளியிடுவேன் எனக் கூறியிருந்த ஸ்ரீ ரெட்டி தற்போது, ‘தமிழ் இயக்குநர் முருகதாஸ்’ எனக் குறிப்பிட்டு இப்படி ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.

வியாழன், 12 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon