மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

காவேரி ஹார்ட் சிட்டி !

 காவேரி ஹார்ட் சிட்டி !

மருத்துவ சேவை என்பது உயிர் காக்கும் உன்னத சேவை என்பதை வாழ்வில் ஒரு முறையேனும் நாமும் உணர்ந்திருப்போம். மனித இனத்தின் நோய்களை தடுத்து, விபத்துகளிலிருந்து, உயிரையும் உடலையும் காத்து, வேதனையையும் வலியையும் தீர்த்து, வாழும் காலத்தில் மகிழ்ச்சியோடு வாழவும் ஆயுளை நீட்டிக்கவும் கடவுள் கொடுத்த வரமே மருத்துவ சேவை ஆகும்

எந்தவித இக்கட்டான சூழலில் அனுமதிக்கப்பட்டாலும், துரிதமாகவும் துல்லியமாகவும் சிகிச்சை கொடுக்க கூடிய மருத்துவர்கள் காவேரி மருத்துவமனையில் எந்த நேரத்திலும் உண்டு

பணத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல் மக்களின் மனதிற்கும் சூழலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ஒரே காரணத்தால்தான், காவேரி மருத்துவமனை இன்றுவரை ஒரு நண்பனை போலவே அனைவரின் உள்ளத்திலும் உள்ளது .

முழுக்க முழுக்க இதயசிகிச்சை மட்டுமே அளிக்க தமிழகத்தில் சில சென்டர்கள் மட்டுமே உள்ளன. அதில் திருச்சி காவேரி மருத்துவமனை 100 படுக்கைகளுடன், உயர்சிகிச்சைகளுக்கான வசதிகளுடன் மிக சிறப்பாக செயல்படுகிறது.

இதயவியல், சிறுநீரகவியல், குழந்தைகள் மருத்துவம், நரம்பியல், முதுகெலும்பு அறுவை சிகிச்சை, மருந்தியல், எலும்புநோயியல், வாஸ்குலர்அறுவை சிகிச்சை, காது மூக்கு தொண்டை, தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சை எனமேலும் பல்வேறு சிகிச்சைகளை அளித்துவரும் காவேரி மருத்துவமனையால் பலரும் பயன்பெற்றுக்கொண்டிருக்கின்றனர். அதில் மிகச்சிறப்பு வாய்ந்தது இதயவியல் மற்றும் குழந்தை இதயவியல்.

இதய சிகிச்சைக்கு மட்டும் தனியாக 100 படுக்கைகள் கொண்ட ”காவேரி ஹார்ட் சிட்டி” எனும் பிரிவு திருச்சி காவேரி மருத்துவமனையில் இயங்கிவருகிறது. வசதி குறைந்த மக்களுக்காக அதிநவீன சிகிச்சைகள், தமிழக முதல்வரின் விரிவான மருத்துவகாப்பீட்டு திட்டத் தின் கீழ் (Chief Minister's Comprehensive Health Insurance Scheme) இலவசமாக செய்யப் படுகிறது. இதன் மூலம் இதயபாதிப்பு உள்ளவர்கள், பைபாஸ் சர்ஜரி போன்ற உயர்சிகிச்சைகள் கூடஇலவசமாக பெறுகிறார்கள்..

மருத்துவமனைக்கு செல்வது என்றாலே பலருக்கும் அலர்ஜி. ஜலதோஷம், காய்ச்சல் தொடங்கி எந்தப் பிரச்னை என்றாலும் மருந்துக் கடைக்குச் சென்று ஏதாவது மாத்திரை வாங்கிப் போட்டுக் கொள்வார்கள். நோய் நன்கு முற்றிய பிறகு, அவசர அவசரமாக மருத்துவமனைக்குச் சென்று, “எப்படியாவது காப்பாத்துங்க டாக்டர்...” என்று தவிப்பார்கள்.

உண்மையில், மருத்துவமனை என்பது நோய் வந்த பிறகு நம்மைக் காக்கும் இடம் மட்டும் அல்ல. நோய் வரும் முன்பே அதைக் கண்டறிந்து, தற்காத்துக்கொள்வதற்கான இடமும்தான் மருத்துவமனை. அறிகுறிகளின் போதே இது இந்த நோயின் தாக்கம், இதன் வெளிப்பாடு என மிகச்சரியாக கண்டறிந்து அதற்கான தீர்வும் கொடுக்கிறது காவேரி மருத்துவமனை.

காவேரி வருவாள் ....

விளம்பர பகுதி

புதன், 11 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon