மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

சாவு பயத்தை காட்டிட்டான் பரமா: அப்டேட் குமாரு

சாவு பயத்தை காட்டிட்டான் பரமா: அப்டேட் குமாரு

சென்னையில வெள்ளம் வந்தது எப்படின்னு இப்பத் தான் ஒரு விவாதம் உருவாகியிருக்கு. அரசாங்கம் காரணமா நம்ம அவசரம் காரணமான்னு பேசிக்கிட்டு இருக்காங்க. அப்ப இறந்துபோனவங்களுக்கெல்லாம் என்ன பதில் சொல்லப்போறாங்க, பலருக்கு வாழ்க்கையே பறிபோச்சேன்னு மத்திய கைலாஷ் சிக்னல்ல நின்னு பேசிட்டிருக்கும்போது அடிச்ச சூரக் காத்துல, கஸ்தூரி பாய் நகர் பறக்கும் ரயில்வே ஸ்டேசன் கூரையெல்லாம் பிஞ்சு அந்தப்பக்கமா போன ஒவ்வொருத்தர் மேலயும் விழுகுது. அன்னைக்கு தேதிக்கு வெள்ளத்துல தப்பிச்ச ஒவ்வொருத்தர்ட்டயும் ஒரு த்ரில்லர் படத்துக்கான கதை இருக்கும். என்ட்டலாம் கேட்டா ஆல்பர்ட் கிட்ச்காக்கையே அலறவிடுவேன்னு யோசிச்சிட்டிருந்தப்பவே, கூரை பிஞ்சு விழுந்த சம்பவம் நடந்ததால இதை டைப் பண்ணும் போது கையெல்லாம் கிடந்து உதறுது. சாவு பயத்தை காட்டிட்டாங்க பரமா. நீங்க அப்டேட்டைப் படிச்சிட்டு போய் கரண்ட் இருந்தா மொபைல சார்ஜ் போட்டு வைங்க. நான் மேட்டுப்பாங்கான இடம் நோக்கி ஓடுறேன்.

@Gnanakuthu

எவ்வளவு குளிச்சாலும் வாளில மீதமிருக்கும் தண்ணிய தூங்கி மேல ஊத்திக்கிறதுல தான் குளியல் முழுமை அடைகிறது.

@Kozhiyaar

முதலில் சிகரெட்டை நீங்கள் பிடிப்பீர்கள்!!

பிறகு சிறிது சிறிதாக அது உங்களைப் பிடித்துக் 'கொல்லும்'!!!

@ShivaP_Offl

காலதாமதமாக சொல்லும் சம்மதமும்,விரைவாக ஒன்றை மறுத்துவிடுவதாலும்தான்,

எல்லாவிதமான தோல்விகளுக்கும் முக்கிய மூலகாரணமாக அமைந்துவிடுகிறது...!!!!

@Kozhiyaar

ஆண்களின் மாமியாருக்கு மகள் என்று பெயர்!!

@Kartiktweaks

சைட் என்ஜினீயர்ன்ற பேர்ல நார்த் இந்தியா வந்து பாருங்க..தமிழ்நாடே சொர்க்கம் தான்

@Kozhiyaar

'நல்லா சாப்பிடுங்க'ன்னு ஆரம்பித்து 'சாப்பாட்ட குறைங்க' என்பதாக முடிகிறது வாழ்க்கை!!!

@teakkadai1

மிட் லைப் கிரைசிஸ்ல முக்கிய அம்சமே ஓல்ட் ஏஜ் அப்பாவுக்கும் நம்மள பிடிக்காது. டீன் ஏஜ் மகனுக்கும் நம்மள பிடிக்காது. சீனியர் மேனேஜர்கிட்டயும் திட்டு வாங்கணும், நாம வேலை வாங்குற ஆளும் நம்மகிட்ட காண்டா இருப்பாங்க.

@ThePayon

நாம் சமூக விரோதப் பொறுக்கி என்று கருதும் ஆளை நம் நண்பர் வரலாற்று அறிஞர் என்று நினைப்பது இணையத்தில் சகஜம்.

@ShivaP_Offl

மணலை போலதான் சில உறவுகள், கையிலே எவ்வளவு கெட்டியாக பிடித்தாலும், சிந்திவிடுகிறது ..!!

@mohanCJayaKumar

ஒருத்தன் comeback amitshah போட்டானே நீ பாக்கல?

“யோ அவனுங்க டெல்லி தமிழனுங்கயா”

#GobackAmitShah

@thanga_magal

கோபத்தில் அடிக்கும்

மகளிடம்

இதுவரை சொன்னதில்லை....

மலர்கொத்தால் அடித்தால்

வலிக்காதென்று..

#மகளதிகாரம்

@thoatta

ஓவியா ஆர்மி, பிந்து ஆர்மி, ஏன் காயத்ரி ரகுராம் ஆர்மி கூட கண்ட சந்துடா இது. இப்ப பொன்னம்பல ஆர்மியாம். புறா கூண்டுல சுறாவ அடைக்க பார்க்கிறானுங்க, அடேய் புல் பூண்டு கூட முளைக்காதுடா

@SolitaryReaper*

வாழ்வாதாரத்தையே அசைச்சு பார்க்கற மாதிரி சூழ்நிலை வரும்போது நான் மனசறிஞ்சி யாருக்கும் எந்த தீங்கும் பண்ணதில்லே, அதனால எந்த தீமையும் என்னை அண்டாதுன்னு சராசரி மனுஷன் உறுதியா நம்புவான்.அந்த நம்பிக்கையோட அந்த கஷ்ட நேரத்தைக் கடந்து போவான்.

நல்லவனா வாழ்றதோட பெனிஃபிட்கள்ல ஒண்ணு...

@elisai_velan

நம் கனவுகளைப் பற்றி சிந்திப்பதை நிறுத்தி, நம் குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றி சிந்திக்க துவங்கும் பொழுது முற்றுப் பெறுகிறது நம் இளமை !!!

@hiphopkarthi24

கழுதையாக பிறந்திருந்தால் கூட கல்யாணம் செய்துவைத்திருப்பர்

- பேச்சுலர் பீலிங்

@mujib989898

விபரம் தெரியாவரிடம் தைரியம் வந்து விடுகிறது

தெரிந்தவரிடம் குழப்பம் வந்து விடுகிறது

இரண்டுக்கும் இடைப்பட்ட நம்பிக்கை எப்போதாவது தான் வருகிறது..

@kirukukavitha

பஸ்ல போவும்போது.. ராஜா ரஹ்மான் மணிசர்மா சிற்பி தேவான்னு யார் பாட்ட கேட்டாலும் ரசனையா இருக்கும் ஏன்னா ரிமோட் உங்கட்ட இல்ல.

-லாக் ஆஃப்

புதன், 11 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon