மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

வேலைவாய்ப்பில் வளர்ச்சி கண்ட ஜூன்!

வேலைவாய்ப்பில் வளர்ச்சி கண்ட ஜூன்!

சென்ற ஜூன் மாதத்தில் இந்தியாவில் பணியமர்த்தும் நடவடிக்கை 9 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

ஒவ்வொரு மாதமும் நாட்டின் பல்வேறு துறைகளில் பணியமர்த்தும் நடவடிக்கை குறித்த புள்ளிவிவரங்களை நவ்கரி.காம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ஜூன் மாதத்துக்கான நவ்கரி வேலை தேடும் குறியீடு சென்ற ஆண்டின் ஜூன் மாதத்தைவிட 9 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக ரியல் எஸ்டேட் துறையில் 19 சதவிகிதமும், ஆட்டோ தொழில் துறையில் 26 சதவிகிதமும் வளர்ச்சி கிட்டியுள்ளது. தொலைத் தொடர்புத் துறையிலும் பணியமர்த்தும் நடவடிக்கை 23 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது. வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள் (9%), எண்ணெய் மற்றும் எரிவாயு (5%), தகவல் தொழில்நுட்பம் - மென்பொருள் (2%) உள்ளிட்ட துறைகளும் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

இந்திய நகரங்களிலேயே அதிகபட்சமாக டெல்லியில் 8 சதவிகிதமும், சென்னையில் 9 சதவிகிதமும் கூடுதலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து நவ்கரி.காம் மூத்த விற்பனை அதிகாரியான வி.சுரேஷ், ‘எகனாமிக் டைம்ஸ்’ ஊடகத்திடம் பேசுகையில், “வேலை தேடும் குறியீடு ஏப்ரல் மாதத்தில் 21 சதவிகிதமாகவும், மே மாதத்தில் 11 சதவிகிதமாகவும் இருந்தது. ஜூன் மாதத்திலும் 9 சதவிகித வளர்ச்சியை அடைந்துள்ளது. ஆட்டோ, ரியல் எஸ்டேட், கட்டுமானம், நிதிச் சேவைகள் உள்ளிட்ட துறைகள் வேலைவாய்ப்பு வளர்ச்சியில் பெரிதும் பங்களித்துள்ளன. வரும் மாதங்களிலும் இந்த வளர்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

புதன், 11 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon