நியூயார்க் நகரில் உள்ள யுனிசெஃப் அமைப்பின் தலைமையகத்திற்கு நடிகை த்ரிஷா சென்றுள்ளார்.
தமிழின் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வரும் த்ரிஷா குழந்தைகளின் நலனுக்காக பல்வேறு விஷயங்களில் ஈடுபாட்டுடன் இயங்கிவருகிறார். குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு நாளை முன்னிட்டு கடந்த ஜூன் 12ஆம் தேதி தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொண்டார். குழந்தைத் தொழிலாளர்கள் உருவாவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அப்பேரணியின் போது பேசினார்.
குழந்தைகளின் நலனுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் த்ரிஷா நியூயார்க் நகரில் உள்ள யுனிசெஃப் தலைமையகத்துக்கு சென்றுள்ளார். இதை ‘யுனிசெஃப் இந்தியா’ தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று (ஜூலை 10) தெரிவித்துள்ளது. யுனிசெஃப்பின் செயல்பாடுகளுக்கு த்ரிஷா ஆதரவு தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
த்ரிஷா இந்த மாதத்தின் தொடக்கத்தில் நியூயார்க் மற்றும் டொரண்டோ நகரில் நடைபெற்ற நார்த் அமெரிக்கன் பிலிம் பெஸ்டிவலில் கலந்துகொண்டார். மலையாளத்தில் அறிமுகமான ஹே ஜூட் படத்திற்காக விருது பெற்றுள்ளார்.