மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

தொடர் கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை!

தொடர் கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை!

கனமழையின் காரணமாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பல பகுதிகளில் பள்ளிகளுக்கு இன்று(ஜூலை 11) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கோவை, நீலகிரி உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், கோவை வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு நேற்றும் விடுமுறை அளிக்கப்பட்டது. இன்றும் மழை தொடர்ந்து பெய்து வருவதால், மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் இன்றும் விடுமுறை அறிவித்துள்ளார்.

நீலகரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர் ஆகிய இடங்களில் கனமழை பெய்து வருவதால், அந்தத் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா விடுமுறை அளித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் 7 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று கொச்சி வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மணிக்கு 45 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதனால், எர்ணாகுளம், கோழிக்கோடு, கண்ணூர், பாலக்காடு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் பெரியார் காலனி, காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

புதன், 11 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon