மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

புதுச்சேரி: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரி: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரி சட்டமன்றம் முன்பாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஸ்மார்ட் மீட்டரை உடைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுச்சேரி நகரப்பகுதிகளில் பழைய மின் மீட்டரை அகற்றிவிட்டு புதிதாக சீனாவில் இருந்து வரவழைக்கப்பட்ட ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டன. இந்த மீட்டரில் குறைபாடு உள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. முன்பு செலுத்தியதைவிட 2 அல்லது 3 மடங்கு கட்டணம் செலுத்தும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலில் ஊழல் நடந்திருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளனர். ஸ்மார்ட் மீட்டரை திரும்பபெற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளன.

இந்நிலையில், புதுச்சேரி சட்டமன்றம் முன்பாக ஸ்மார்ட் மீட்டர்களை உடைத்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று (ஜூலை 11) ஆர்ப்பாட்டம் நடத்தினர். அன்பழகன் வையாபுரி மணிகண்டன், பாஸ்கர் மற்றும் அசனா ஆகியோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்பழகன், “புதுச்சேரியில் 4, 40 ஆயிரம் மின் இணைப்புகள் உள்ளன. ஆனால், 34 ஆயிரம் சீன மீட்டரை மட்டுமே வாங்கியுள்ளனர். அதுவும் அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளனர். இதில் 48 கோடி ரூபாய் வரிப் பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. இந்த மீட்டர் அதிகப்படியான ரீடிங்கை காண்பிப்பதால் மக்கள் அதிகளவு கட்டணத்தை செலுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஸ்மார்ட் மீட்டரை உடைத்து போராட்டம் நடத்தியுள்ளோம். அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம்” என்று தெரிவித்தார்.

புதன், 11 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon