மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

ஆரவ் எனது மகன் இல்லை: நகுல்

ஆரவ் எனது மகன் இல்லை: நகுல்

நடிகர் நகுல், தனக்கு மகனே இல்லை எனத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படம் மூலம் அறிமுகமான நடிகர் நகுல், காதலில் விழுந்தேன் மூலம் தனி ஹீரோவாக என்ட்ரி ஆனார். அதன்பின்னர் தொடர்ச்சியாக பல படங்கள் நடித்தாலும் பெரிய அளவிற்கு வெற்றியைக் கொடுக்கவில்லை. தற்போது ராஜ் பாபு இயக்கத்தில் செய் எனும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், “ எனக்கும் எனது மனைவி ஸ்ருதிக்கும் ஒன்றரை வயதில் மகன் இருப்பதாக சமீபத்தில் செய்தி வெளியானதைக் கவனித்தேன் . உண்மையில் எனக்கு மகனே இல்லை. அது எனது அண்ணனின் மகன் ஆரவ். அண்ணன் மகன் ஆரவ் எனக்கும் மகன் போலத்தான். ஆனால் எனது சொந்த மகன் அல்ல எனும் விஷயத்தைத் தெளிவுபடுத்துகிறேன். இப்போதைக்கு எனது குழந்தை எனது மனைவி ஸ்ருதி மட்டும்தான்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

புதன், 11 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon