மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

‘கம்பேக்’ கொடுக்கும் ராம்கி

‘கம்பேக்’ கொடுக்கும் ராம்கி

நடிகர் ராம்கி நடித்துவரும் ஆர்.எக்ஸ்-100 படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தனக்கென ஓர் இடம்பிடித்தவர் நடிகர் ராம்கி. படங்கள் நடிப்பதைக் குறைத்துக்கொண்ட அவர், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழில் வெங்கட் பிரபு இயக்கத்தில், பிரியாணி படத்தில் நடித்து ரீ-என்ட்ரி கொடுத்தார். ஆனால், அந்தப் படமும் சரியாகப் போகவில்லை.

இந்த நிலையில் தெலுங்கில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஆர்.எக்ஸ்-100 படத்தில் நடித்து வருகிறார். ராம் கோபால் வர்மாவிடம் உதவி இயக்குநராக இருந்த அஜய் பூபதி இந்தப் படத்தை இயக்குகிறார். கார்த்திகேயாவும் பயால் ராஜ்புத்தும் நாயகன் நாயகிகளாக நடித்து வருகின்றனர். கேசிடபுள்யூ நிறுவனம் சார்பில் ஜி.அசோக் ரெட்டி தயாரிக்கிறார்.

இந்த நிலையில், இந்தப் படம் குறித்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் ராம்கி, “நான் இந்தப் படத்தில் கதாநாயகனின் நண்பனுக்கு அப்பாவாக நடிக்கிறேன். எனக்கான முழு ஸ்கிரிப்டையும் பார்த்து எனக்கு இந்த கேரக்டர் பொருத்தமாக இருந்ததாலேயே இதில் நடிக்க விரும்பினேன்” என்றார்.

மேலும், நாசர், ரகுவரன் ஆகியோர் சினிமா கற்ற இடத்திலேதான் தானும் சினிமா கற்றேன் எனக் கூறிய அவர் திரைப்படம் ஒன்றை விரைவிலேயே இயக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

புதன், 11 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon