மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

வீடு விற்பனையில் முன்னேற்றம்!

வீடு விற்பனையில் முன்னேற்றம்!

நாடு முழுவதிலும் முன்னணி நகரங்களில் வீடுகள் விற்பனை 15 விழுக்காடு வளர்ச்சியை எட்டியுள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

நாட்டின் ஒன்பது முன்னணி நகரங்களில் ஏப்ரல் - ஜூன் காலகட்டத்தில் வீடுகளின் விற்பனை 15 விழுக்காடு வளர்ச்சியை எட்டியுள்ளது. இதுகுறித்து ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான ‘PropEquity' வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ‘2018ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இந்தியாவின் ஒன்பது முன்னணி நகரங்களில் வீடுகளின் மொத்த நுகர்வு 15 விழுக்காடு வளர்ச்சியை எட்டி, 43,246 யூனிட்டுகளிலிருந்து 49,945 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. சென்னை, மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி, கொல்கத்தா, புனே, தானே, குருகிராம், நொய்டா ஆகிய நகரங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

PropEquity நிறுவனத்தின் நிறுவனரும், தலைமைச் செயலதிகாரியுமான சமிர் ஜசுஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவில் ரியல் எஸ்டேட் வீடுகளுக்கான சந்தை ஏப்ரல் - ஜூன் காலாண்டில் சீராகியுள்ளது. ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் பழைய இருப்புகளைத் தீர்த்து, பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. இதே சீரான நிலை, வரவிருக்கும் காலாண்டுகளிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளார். விற்பனையாகாத வீடுகளின் எண்ணிக்கை இரண்டு விழுக்காடு சரிந்து 6,31,195 யூனிட்டுகளிலிருந்து 6,16,461 யூனிட்டுகளாகக் குறைந்துள்ளதாகவும் இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

புதன், 11 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon