மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் ரத்தன் டாடா?

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் ரத்தன் டாடா?

ஆர்எஸ்எஸ்ஸைச் சேர்ந்த அரசு சாரா அமைப்பு ஒன்றின் நிகழ்ச்சியில் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டது நாடு முழுவதும் சர்ச்சையையும் விவாதங்களையும் எழுப்பியது. இப்போது, ஆர்எஸ்எஸ் அமைப்புடன் இணைக்கப்பட்ட அரசு சாரா அமைப்பு ஒன்றின் நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துடன், பிரபல தொழிலதிபரும் டாடா அறக்கட்டளையின் தலைவருமான ரத்தன் டாடா பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை என்றாலும், இந்நிகழ்ச்சி ஆகஸ்ட் 24ஆம் தேதியன்று நடைபெறுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த அரசு சாரா அமைப்பான நானா பால்கர் ஸ்மிருதி சமிதி, நோயாளிகளுக்குச் சேவை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த அமைப்பு நடத்தவிருக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க ரத்தன் டாடாவுக்கும் மோகன் பகவத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நானா பால்கர் ஸ்மிருதி சமிதியின் பத்து மாடிக் கட்டடம் மும்பையில் டாடா நினைவு மையத்துக்கு (Tata Memorial Centre) அருகே உள்ளது. டாடா நினைவு மையத்தில் சிகிச்சை பெற்று வரும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நானா பால்கர் ஸ்மிருதி சமிதி அமைப்பு சேவை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

புதன், 11 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon