மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

‘ஸ்நீக் பீக்’ இப்போ ‘டெலீடட்’ ஆச்சு!

‘ஸ்நீக் பீக்’ இப்போ ‘டெலீடட்’ ஆச்சு!

நடிகர் சிவா நடிப்பில் வெளியாகவுள்ள தமிழ்ப்படம்-2 புரோமோ வீடியோ ஒன்றில் புதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சிவா - சி.எஸ்.அமுதன் காம்போவில் உருவாகிவரும் தமிழ்ப்படம்-2, ஜூலை 12ஆம் தேதி வெளியாகிறது. இதையொட்டி போஸ்டர்ஸ், புரோமோ வீடியோக்களை கணக்கேயில்லாமல் வெளியிட்டு வருகிறது படக்குழு. அந்த வகையில் ஜூலை 9ஆம் தேதி ஒரு வீடியோ வெளியிட்டிருந்தது. ஜிஎஸ்டி, ஆப்பிள் ஐபோன், பிரதமர் மோடி, தேவர் மகன் கமல், ஜல்லிக்கட்டு, எனப் பலரையும் கலாய்த்து வெளியிட்டிருந்த அந்த வீடியோவை #GoBackSanthanaBarathi எனும் ஹேஷ்டேக்குடன் வெளியிட்டிருந்ததால், அது பாஜக கட்சியைச் சேர்ந்த அமித் ஷாவின் சென்னை வருகையைக் கிண்டல் செய்யும் விதமாகவும் இருந்தது.

இந்த நிலையில் சத்தமே இல்லாது ஒரு சம்பவத்தை செய்திருக்கிறது படக்குழு. அதாவது படத்தின் இரண்டு நிமிடக் காட்சி எனக் கூறி வெளியிடப்பட்ட அந்த ஸ்நீக் பீக் வீடியோ தற்போது ‘டெலீடட் சீன்ஸ்’ எனும் பெயரில் யூடியூப்பில் உள்ளது. இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள இயக்குநர் ,“சில டெக்னிக்கல் பிரச்சினைகளால் இந்தக் காட்சிகளை நீக்கியிருக்கிறோம். இந்தத் தகவலை அனைவருக்கும் பரப்புங்கள்” எனக் கூறியுள்ளார்.

புதன், 11 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon