மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

ஐபிஎல்லில் மீண்டும் டி வில்லியர்ஸ்

ஐபிஎல்லில் மீண்டும் டி வில்லியர்ஸ்

ஐபிஎல் தொடரில் இன்னும் சில ஆண்டுகள் பங்கேற்கப் போவதாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஏபி டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஏபி டி வில்லியர்ஸ் அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் கடந்த மே மாதம் தனது ஓய்வை அறிவித்திருந்தார். அந்தச் சமயத்தில் தென்னாப்பிரிக்காவின் உள்ளூர் அணியான டைடன்ஸ் அணிக்காக மட்டும் தொடர்ந்து ஆடுவேன் என்றும் மற்ற வெளிநாட்டுத் தொடர்களில் பங்கேற்பது குறித்து எந்தத் திட்டமும் இல்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது 'இன்டிபென்டென்ட் ஆன்லைன்' என்ற தென்னாப்பிரிக்க ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் பேசிய டி வில்லியர்ஸ், ஐபிஎல் தொடரில் இன்னும் சில ஆண்டுகள் விளையாடப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், "சர்வதேச லீக் தொடர்களில் பங்கேற்க நிறைய அழைப்புகள் வருகிறது. ஆனால், பெங்களூரு எனக்கு மிகவும் சிறப்பானது. எனது இன்னொரு வீடு. எனது 100ஆவது டெஸ்ட் போட்டியை அங்கு தான் விளையாடினேன். என் வாழ்வுடன் மிகவும் ஒன்றிய இடம். அங்குள்ள ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பு அளவு கடந்தது" என்று தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் டி20 இரண்டுக்குமான வேறுபாடு குறித்து பேசிய அவர், "எனக்கு எல்லாவித ஆட்டங்களும் பிடிக்கும். மற்றவற்றைக் காட்டிலும் டி20 சற்று சுவாரஸ்யமானது. அதற்குத்தான் அதிக ரசிகர்கள் உள்ளனர். அதுமட்டுமின்றி ஒரு வீரரை பொருளாதார அளவில் முன்னேற்றம் அடையச் செய்வதும் அதுதான். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான மதிப்பு எப்போதும் அழியாது" என்று கூறியுள்ளார்.

(டி வில்லியர்ஸ் பற்றி மேலும் தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும்...)

டி வில்லியர்ஸ் எனும் சூப்பர்மேன்

மட்டை ஏந்திய மந்திரவாதி

புதன், 11 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon