மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

ரயில் விபத்தைத் தவிர்த்த ஓட்டுநர்!

ரயில் விபத்தைத் தவிர்த்த ஓட்டுநர்!

நெல்லை மாவட்டம், பகவதிபுரம் அருகே ரயில் தண்டவாளத்தில் விழுந்து கிடந்த மரத்தைத் தூரத்தில் இருந்தே பார்த்த ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது.

கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து திருநெல்வேலி வரை இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் இன்று (ஜூலை 11) அதிகாலை 3 மணியளவில் பகவதிபுரம் ரயில் நிலையத்தைக் கடந்து உட்கோணம் என்ற காட்டுப் பகுதியில் சென்று கொண்டிருந்தது . அப்போது தண்டவாளத்தில் ஒரு மரம் விழுந்து கிடந்ததைப் பார்த்த ஓட்டுநர் ரயிலின் வேகத்தைக் குறைத்து ரயிலை நிறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, ரயில்வே அதிகாரிகளுக்குத் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே ஊழியர்கள், மரத்தை வெட்டி அகற்றி தண்டவாளத்தை சீரமைத்தனர். இதையடுத்து சுமார் 3 மணி நேரத்துக்குப் பிறகு ரயில் மீண்டும் புறப்பட்டுச் சென்றது. அதிகாலை நேரம் என்பதாலும், காட்டுப்பகுதியில் ரெயில் நின்றதாலும் பயணிகள் அச்சமடைந்தனர். இதனால், செங்கோட்டைக்கு அதிகாலை 3.50 மணிக்கு வரவேண்டிய ரயில்3 மணி நேரம் தாமதமாக காலை 6.50 மணிக்கு வந்தது.

புனலூர்- பாலக்காடு செல்லும் பாலருவி எக்ஸ்பிரஸ் கடந்த 9ஆம் தேதி முதல் நெல்லை வரை இயக்கப்பட்டுவருகிறது.

புதன், 11 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon