மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

சர்ச்சை: தாய்ப்பால் புகட்டும் புகைப்படம்!

சர்ச்சை: தாய்ப்பால் புகட்டும் புகைப்படம்!

ஹாலிவுட் நடிகை ஒருவர் தாய்ப்பால் கொடுப்பது போன்று வெளியிட்ட புகைப்படம் சர்ச்சையாகியுள்ளது.

ஹாலிவுட் நடிகையும் மாடலுமான கிறிஸ்ஸி டிஜென் என்பவர் பிரபல பாடகர் ஜான் லெஜண்ட் என்பவரை கடந்த 2013ஆம் ஆண்டுதிருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு லூனா என்கிற 2 வயது குழந்தை உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. அந்தகுழந்தைக்கு தாய்ப்பால் புகட்டுவது போல் இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தைப் பார்த்து சிலர் ஆபாசமாக இருப்பதாகக் கூறி கடுமையாக இவரை விமர்சித்து வந்தாலும், சிலர் தாய்ப்பாலின் அவசியத்தை எடுத்துக்கூறும் வகையில், இந்த புகைப்படம் இருப்பதாக கூறி இவருக்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இதுபோல சர்ச்சைகள் கிளம்புவது புதிதல்ல.நடிகை கஸ்தூரி குழந்தைகளுக்கு தாய்ப்பால் புகட்டும் புகைப்படம் ஒன்றை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டார். ஆரம்பத்தில் இந்த புகைப்படம் சர்ச்சையாக பார்க்கப்பட்டாலும், பின்பு தைரியமாகஇதுபோன்ற புகைப்படத்தை வெளியிட்டு தாய்ப்பாலின் மகிமையை எடுத்துக்கூறிய இவருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துதெரிவித்தனர்.

அதேபோன்று, கேரளாவிலும் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. மலையாள மாடல் ஜிலு ஜோசப் ஒரு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதுபோன்ற புகைப்படம் கிரிகலட்சுமி என்கிற பத்திரிகையின் அட்டை படத்தில் வெளியாகி சர்ச்சையை சந்தித்தது.

தாய்ப்பால் கொடுத்தால் அழகு குறையும் என்கிற நம்பிக்கை நடிகைகள் மட்டுமின்றி, பல பெண்கள் மத்தியிலும் இருக்கிறது. ஆனால், இதனை மருத்துவர்கள் பலரும் மறுத்து வருகின்றனர்.

புதன், 11 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon