மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

பலிக்காத காலா கனவு!

பலிக்காத காலா கனவு!

இராமானுஜம்

மினி தொடர்: காலாவின் வியாபாரப் பயணம் - 27

தமிழக திரையரங்க உரிமையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த படம் ரஜினிகாந்த் நடித்த காலா. ரஜினிகாந்த் குடும்பத் தயாரிப்பான காலா படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து பல்வேறு பிரச்சினைகளை கடந்து வந்தது. படம் வெளிவருவதையொட்டி தமிழ் சினிமா காலா மூலம் கற்றதும் பெற்றதும் என்ன என்பதை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் மினி தொடர் வாயிலாக அனைத்து தகவல்களையும் பதிவு செய்து வந்தோம்.

காலா பட செய்திகள் விஷயத்தில் ஊடகம் தடம் புரண்டு ஒரு சார்பு செய்திகளை வெளியிட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளோம். காலா வியாபாரத்தில் நடைபெற்ற உள் குத்து விஷயங்களையும் உலகறிய கூறியிருக்கிறோம்.

இவ்வாண்டு இதுவரை வெளியான படங்களில் அதிகமாக வசூல் செய்து சாதனை நிகழ்த்தும் என்கிற எதிர்பார்ப்பை காலா கானல் நீராக்கி விட்டது.

நாளையுடன் காலா வெளியாகி 35 நாட்களை நிறைவு செய்ய இருக்கிறது. தாங்கள் எதிர்பார்த்த விலை கிடைக்காததால் தெலுங்கு டப்பிங், மற்றும் கேரளாவில் தயாரிப்பாளரே நேரடியாக ரிலீஸ் செய்தார்.

தமிழகத்தில் முழுக்க விநியோக உரிமை வழங்கப்பட்டு சுமார் 60 கோடி வரை விநியோகஸ்தர்களிடம் லைக்கா பணம் பெற்றதாக கூறப்படுகிறது. திரையரங்குகள் மூலம் சுமார் 45 கோடி வரை அட்வான்ஸ், எம்.ஜி முறையில் பணம் பெறப்பட்டுள்ளது.

மொத்த வருவாய் 21 கோடி ரூபாய் எஞ்சிய தொகையை தியேட்டர்களுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும். கோவையிலும், மதுரை ஏரியாவிலும் சம்பந்தப்பட்ட விநியோகஸ்தர்கள் திருப்பூர் சுப்பிரமணி, மதுரை அன்புச் செழியன் இருவரும் தங்கள் சொந்தப் பொறுப்பில் அட்வான்ஸ் பணத்தில் பாக்கியை திருப்பிக் கொடுத்து விட்டனர். பிற பகுதிகளில் திரும்பி கொடுக்கப்படாத அட்வான்ஸ் தொகைக்கு தியேட்டர்கள் வட்டி கட்டி வருகின்றனர்.

இது சம்பந்தமாக ஊடகங்களில் காலா படம் திரையிட்டதில் நஷ்டம் திருப்பிக் கொடுக்கப் போவது யார் என செய்திகள் வெளியானது.

காலா படத்தை பொறுத்தவரை தொலைக்காட்சி உரிமை, மலேசியா, சிங்கப்பூருக்கான வெளிநாட்டு உரிமை மட்டும் அவுட் ரேட் அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. கர்நாடக மாநில உரிமை அவுட்ரேட் அடிப்படையில் கொடுக்கப்பட்டதை தயாரிப்பு நிறுவனம் திரும்பப் பெற்று நேரடியாக ரிலீஸ் செய்தனர்.

காலா படத்தின் மூலம் மலேசியா உரிமை வாங்கியவருக்கும், எம்.ஜி அடிப்படையில் படத்தை திரையிட்ட தியேட்டர்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

ஊடகங்களில் நஷ்டம் என்று வந்த செய்திகளுக்கு பதில் சொல்லும் வகையில், காலா படத்தால் எங்களுக்கு நஷ்டம் இல்லை என எந்த வித புள்ளி விபரங்களும் இன்றி தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்துள்ளார்.

காலா தயாரிப்பாளருக்கு லாபத்தில் நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது, தியேட்டர்களுக்கு நஷ்டத்தை கொடுத்திருக்கிறது. ரஜினிக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது எப்படி?

காலா படத்தால் பாதிக்கப்பட்டவர்கள், பலன் அடைந்தவர்கள் பற்றிய முழுமையான தகவல்கள்..

நாளை இறுதி கட்டுரையில்..

காலாவுக்குப் போடப்பட்ட ஸ்கெட்ச்!

காலா தர்மன் அல்ல!

ரஜினி தடுமாறினாலும் சினிமா நிலைக்க வேண்டும்!

காலாவுக்காக 11 லட்சம் பேர் வருவார்களா?

காலா அத்துமீறல்களும் விஷாலின் மௌனமும்!

காலா வேட்டை: ஆளும்கட்சி உதவியுடன் ஈ பறக்கிறது!

காலாவுக்காக விஷால் மௌன விரதமா?

வாய்ப்பை வீணடித்த ரஜினி

பரபரப்பு இல்லாத ஓப்பனிங்

குடை சாய்ந்த கோபுரம்!

ஆட்டம் காணும் சூப்பர் ஸ்டார் அரியணை

காலா வசூலித்த 100 கோடியைத் தேடி...

எங்கே அந்த நூறு கோடி?

காலா கணக்கு: எனக்கு 20 உனக்கு 10!

கோவையில் வெளுத்த காலா சாயம்!

காலாவைக் காப்பாற்றிய செங்கல்பட்டு!

வட ஆற்காட்டில் சிதைந்த 6 கோடிக் கனவு!

கால்பந்தாக உருட்டப்பட்ட காலா!

சாதியக் கட்டுமானத்தால் சரிந்த காலா!

சென்னை என்னும் வழுக்குப் பாறை!

விதிமுறைகளை மீறியும் நிரம்பாத கல்லா!

இந்தப் பின்னடைவு தற்காலிகமானதா, நிரந்தரமானதா?

காலா: தமிழ் சினிமா பெற்றது, கற்றது என்ன?

செங்கல்பட்டில் நடந்த காலா பஞ்சாயத்து!

பலிகடா ஆக்கப்பட்டதா குமரன் தியேட்டர்?

நஷ்டத்தை உருவாக்கும் சூப்பர் ஸ்டார்கள்!

புதன், 11 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon