மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜூலை 2018

பூமியை நிறைக்கும் மனிதர்கள்!

பூமியை நிறைக்கும் மனிதர்கள்!

தினப் பெட்டகம் – 10 (11.07.2018)

இன்று (ஜூலை 11) உலக மக்கள்தொகை தினம்

1. ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 11, உலக மக்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் உலகில் நிலவும் மக்கள்தொகை சம்பந்தமான பிரச்சினைகளைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

2. கி.மு. 1000இல் உலகின் மக்கள்தொகை 400 மில்லியன்; 1804இல் 1 பில்லியன்; 1960இல் 3 பில்லியன்; 2000இல் அது இரண்டு மடங்காக உயர்ந்தது - 6 பில்லியன்.

3. ஒரு நாளின் ஒவ்வொரு நொடியிலும், 4.2 குழந்தைகள் பிறக்கின்றன; 1.8 பேர் இறக்கின்றனர்.

4. உலக மக்கள்தொகையில் 52% பேர் 30 வயதிற்கும் குறைவானவர்கள்.

5. உலகத்தில் இருக்கும் மக்கள் அனைவரும் ஒருவருக்குப் பக்கத்தில் ஒருவர் நின்றால், 500 சதுர மைல்களுக்குள் அடங்கிவிடுவோம்.

6. உலகம் தோன்றிய நாள் முதல் வாழ்ந்த மனிதர்களின் எண்ணிக்கையில், 6.5% இன்று வாழ்கிறோம்.

7. மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு, தேவையில்லாத அல்லது தற்செயலான கர்ப்பங்கள் மூலமாக அதிகரிக்கிறது.

8. 20 நிமிடங்களில், 3000க்கும் அதிகமான மனிதர்கள் பிறக்கிறார்கள். அதே நேரத்தில், ஒரு தாவரமோ, மிருகமோ அழிந்துபோகிறது.

9. இன்றைய உலக மக்கள்தொகை 7.6 பில்லியன்.

10. உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடு, சீனா. இரண்டாம் இடத்தில் இந்தியா இருக்கிறது. ஆனால், இன்னும் சில வருடங்களில் இந்தியா முதல் இடத்திற்கு வந்துவிடும்.

- ஆஸிஃபா

புதன், 11 ஜூலை 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon