மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 14 ஜுன் 2018

காலாவைக் காப்பாற்றிய செங்கல்பட்டு!

காலாவைக் காப்பாற்றிய செங்கல்பட்டு!

இராமானுஜம்

மினி தொடர்: காலாவின் வியாபாரப் பயணம் - 16

காலா வெளியாகி நேற்றுடன் ஒரு வாரம் முடிவடைந்திருக்கிறது. கடந்த 11ஆம் தேதிக்குப் பின் தியேட்டர்களில் இரட்டை இலக்க டிக்கட் விற்பனைக்குப் போராடின தியேட்டர்கள் என்கிறார் தியேட்டர் மேனேஜர் நாகராஜ்.

தமிழகத்தில் கோவை ஏரியாவை விட அதிகமான திரையரங்குகள், திரண்ட ஜனத்தொகை கொண்டது செங்கல்பட்டு விநியோகப் பகுதி. சென்னை புறநகர், திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள தியேட்டர்கள் இவ்விநியோகப் பகுதியில் உள்ளன.

சென்னை நகரத்தைக் காட்டிலும் அதிகமான மால் திரையரங்குகள், தொழில்நுட்பப் பூங்காக்கள் இப்பகுதியில் இருப்பதால் தியேட்டர் வசூல் சென்னை நகர் போன்றே இருக்கும்.

பிரபல விநியோகஸ்தர் லத்திப் ரவி 12 கோடிக்கு அவுட்ரேட் முறையில் காலா படத்தை வாங்க முயற்சித்தார். லைக்காவும் தனுஷ் மேனேஜர் வினோத்தும் ரஜினியிடம் கேட்டுக் கூறுகிறோம் எனக் கூறிவிட்டார்கள். ஆனால், அதே 12 கோடிக்கு விநியோக உரிமையை வேறு ஒருவருக்கு வழங்கினார்கள்.

அதிகமான மல்டிபிளக்ஸ், மால்கள் இப்பகுதியில் இருப்பதால்முன்பதிவு மூலம் டிக்கெட் விற்பனை அதிகமாக இருக்கும். கோயம்பேடு ரோகிணி, அம்பத்தூர் ராக்கி, வில்லிவாக்கம் AGS, விருகம்பாக்கம் நேஷனல், வேளச்சேரி லக்ஸ், PVR, மாயாஜால் ஆகியவை இப்பகுதிக்குட்பட்டவை என்பதால் தமிழகத்தில் அதிகபட்ச விலை செங்கல்பட்டு பகுதிதான். வசூலிலும் இது முதலிடத்தில் இருக்கும்.

காலா படத்திற்கு இப்பகுதியில் முதல் நாள் 2.68 கோடி ரூபாய் மொத்த வசூல் ஆகியுள்ளது.

இரண்டாம் நாளுக்கு முன்பதிவு செய்த ரஜினி ரசிகர்கள் படம் பற்றி கேள்விப்பட்டு வாங்கிய டிக்கெட்டை வந்த விலைக்குத் திருப்பிக் கொடுத்துவிட்டுச் சென்றனர்.

தனித் திரையரங்குகள் கபாலி படம் போன்று கல்லா கட்ட முடியாமல் முதல் நாள் இரவுக் காட்சிக்கே தடுமாறின.

முதல் மூன்று நாட்களில் சுமார் 6.85 கோடியை மொத்த வசூலாகப் பெற்ற காலா, திங்கள் கிழமை முதல் திசை தவறிய கப்பலாக மாறியது.

காலா படத்தின் மொத்த வசூல் அதிகமிருக்கக் காரணம் மாயாஜால், மற்றும் மால் தியேட்டர்களே. இல்லையென்றால் மோசமான இழப்பைத் தயாரிப்பாளர் சந்திக்க வேண்டியிருந்திருக்கும்.

ஐந்தாவது நாள் முடிவில் காலா உலகம் முழுவதும் வசூலான தொகை அடிப்படையில் 100 கோடியைக் கடந்திருக்கிறது.

தமிழகத்தில் முதல் வார முடிவில் 150க்கும் மேற்பட்ட திரைகளில் காலா படம் விடுவிக்கப்பட்டுப் புதிய படங்கள் திரையிடப்பட்டுள்ளன.

காலாவை வாங்க யாரும் முன்வராத வட ஆற்காடு பகுதியின் வசூல் என்ன?

நாளை பகல் 1 மணிக்கு

காலாவுக்குப் போடப்பட்ட ஸ்கெட்ச்!

காலா தர்மன் அல்ல!

ரஜினி தடுமாறினாலும் சினிமா நிலைக்க வேண்டும்!

காலாவுக்காக 11 லட்சம் பேர் வருவார்களா?

காலா அத்துமீறல்களும் விஷாலின் மௌனமும்!

காலா வேட்டை: ஆளும்கட்சி உதவியுடன் ஈ பறக்கிறது!

காலாவுக்காக விஷால் மௌன விரதமா?

வாய்ப்பை வீணடித்த ரஜினி

பரபரப்பு இல்லாத ஓப்பனிங்

குடை சாய்ந்த கோபுரம்!

ஆட்டம் காணும் சூப்பர் ஸ்டார் அரியணை

காலா வசூலித்த 100 கோடியைத் தேடி...

எங்கே அந்த நூறு கோடி?

காலா கணக்கு: எனக்கு 20 உனக்கு 10!

கோவையில் வெளுத்த காலா சாயம்!

வியாழன், 14 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon