மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 14 ஜுன் 2018

போக்குவரத்து வருவாயை உயர்த்த இலக்கு!

போக்குவரத்து வருவாயை உயர்த்த இலக்கு!

இந்திய போக்குவரத்துத் துறையின் வருவாயை 2025ஆம் ஆண்டுக்குள் இரு மடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய ரயில்வே போக்குவரத்துத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஜூன் 12ஆம் தேதி தி எக்கனாமிக் டைம்ஸ் ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறுகையில், '2025ஆம் ஆண்டுக்குள் இந்தியப் போக்குவரத்துத் துறையின் வருவாயை இரு மடங்காக உயர்த்தி ரூ.4 லட்சம் கோடியாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரயில்வே துறையின் முதலீட்டையும் அதிகரித்து, ரயில்வே துறையை லாபகரமான துறையாக மாற்றத் திட்டமிட்டுள்ளோம். ரயில்வே துறைக்கான முதலீட்டை ரூ.9 லட்சம் கோடியாக அதிகரிக்கவும் இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

இந்த முதலீட்டைக் கொண்டு மின் வழித் தடங்களை அதிகரித்தல், சமிக்ஞை வசதிகளை மேம்படுத்துதல், ரயில்வே சொத்துகளைப் பயன்படுத்துதல், இவற்றின் மூலம் ரயில்வே துறையின் செலவுகளைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். ஆண்டுக்கு ரூ.15,000 கோடி வரையில் ரயில்வே துறையின் செலவுகளைக் கட்டுப்படுத்த முயற்சித்து வருகிறோம். மின் வழித் தடங்கள் உருவாக்கத்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் பெரும்பாலான முக்கிய வழித் தடங்களில் டீசல் என்ஜின்கள், மின்சார என்ஜின்களாக மாற்றப்படும்" என்றார்.

வியாழன், 14 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon