மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 14 ஜுன் 2018

காஞ்சிபுரம்: காவலர் பொதுப் பள்ளி திறப்பு!

காஞ்சிபுரம்: காவலர் பொதுப் பள்ளி திறப்பு!

காஞ்சிபுரம் மாவட்டம், ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவலர் உயர்பயிற்சியக வளாகத்தில் தற்காலிகமாக நிறுவப்பட்டுள்ள காவலர் பொதுப் பள்ளியை முதல்வர் நேற்று (ஜூன்13) திறந்து வைத்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவலர் உயர்பயிற்சியக வளாகத்தில் தற்காலிகமாக நிறுவப்பட்டுள்ள காவலர் பொதுப் பள்ளியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று திறந்து வைத்தார். இந்த உண்டு உறைவிடப் பள்ளியானது, காவலர் பொதுப் பள்ளி என்ற பெயரில் நிறுவுவதற்காக 51 கோடியே 14 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. இப்பள்ளிக்கு, காஞ்சிபுரம் மாவட்டம், ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவலர் உயர்பயிற்சியக வளாகத்தில் தற்காலிகமாக இடம் தேர்வு செய்யப்பட்டு, 2018-2019ஆம் கல்வியாண்டில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ், ஆங்கில வழிக் கல்வியில் 5ஆம் வகுப்பு வரை தொடங்கிட அரசாணை வெளியிடப்பட்டது.

காவலர் பொதுப் பள்ளியில் காவலர்களின் குழந்தைகள் மட்டுமின்றி, அப்பகுதியிலுள்ள பொதுமக்களின் குழந்தைகளும் கல்வி பயில்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. காவலர் பொதுப் பள்ளியை முதல்வர் நேற்று திறந்து வைத்தார். மேலும் இப்பள்ளியில் பணியாற்றுவதற்காக ஒரு தலைமை ஆசிரியை மற்றும் ஐந்து ஆசிரியைகளுக்கு மாற்றுப் பணி ஆணைகளையும் வழங்கினார், அதனைத் தொடர்ந்து ஐந்து மாணவ, மாணவிகளுக்குச் சேர்க்கை ஆணைகளையும் வழங்கினார்.

வியாழன், 14 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon