மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 14 ஜுன் 2018

செஸ்: பர்தா நிர்பந்தத்தால் வீராங்கனை விலகல்!

செஸ்: பர்தா நிர்பந்தத்தால் வீராங்கனை விலகல்!

பர்தா அணிய வேண்டும் எனக் கட்டாயப்படுத்துவதால், ஈரானில் நடக்கும் ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தான் பங்கேற்கப் போவதில்லை என செஸ் வீராங்கனை சௌமியா சுவாமிநாதன் அறிவித்துள்ளார்.

ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டித் தொடர், வரும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 4 வரை ஈரானில் நடக்கவுள்ளது. இப்போட்டிக்கு, உலக ஜூனியர் பெண்கள் பட்டம் உள்ளிட்ட பல பட்டங்களைப் பெற்ற, இந்திய அளவில் 5வது இடத்திலுள்ள வீராங்கனையான சௌமியா சுவாமிநாதன் தேர்வாகியிருந்தார்.

இந்நிலையில், தங்கள் நாட்டின் விதிமுறைப்படி பர்தா அணிந்துகொண்டுதான் போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டும் என ஈரான் அரசு கட்டாயப்படுத்துவதால், அப்போட்டியிலேயே தான் கலந்துகொள்ளப்போவதில்லை எனும் முடிவை ஃபேஸ்புக்கில் தெரிவித்திருக்கிறார் செளமியா.

வீராங்கனைகள் இதுபோல ஈரானுக்குச் செல்லாமல் புறக்கணிப்பது இது ஒன்றும் முதல்முறை அல்ல. அமெரிக்காவைச் சேர்ந்த செஸ் வீராங்கனையான நாஸி பைகிட்ஸேவும் இதே விவகாரத்தினால் 2017இல் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ளாமல் தவிர்த்தது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 14 ஜுன் 2018

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon